7 நாட்களில் குடல் புழுக்களை எப்படி வெளியேற்றலாம்?

Report Print Jayapradha in மருத்துவம்

குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது, மேலும் குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும்.

நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான மருந்துகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் குடலில் வாழும் புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன.

தேவையான பொருட்கள்
 • சிவப்பு வெங்காயம்- 6
 • தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
 • வெங்காயத்தை நறுக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின் ஒரு இரவு முழுக்க இதனை ஊறவிடவும்.
 • மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை ஒரு கப் எடுத்து பருகவும். ஒரு வாரம் தொடர்ந்து இதனை செய்து வரவும்.
 • சிவப்பு வெங்காய ஜூஸ் குடல் புழுக்களை துரிதமாக வெளியேற்றுவதால் குடல் போக்குவரத்து அதிகரிக்க ஒரு சிறந்த தேர்வாகும். ஆகவே இந்த ஜூஸை பருகுவது ஒரு சிறந்த தீர்வாகும்.

குடல் புழுக்களை அழிக்க உதவும் வேறு சில வழிகள்
 • சிவப்பு வெங்காயத்துடன் ஒரு பல் பூண்டு மற்றும் அவகாடோவுடன் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொண்டு தினமும் பருகி வந்தால் குடல் புழுக்களைப் போக்குவதில் நல்ல பலன் கிடைக்கும்.
 • சிவப்பு வெங்காயம் மற்றும் பாலுடன் பெப்பர்மின்ட் சேர்த்து தயாரிக்கும் ஒரு கலவை குடல் புழுக்களைப் போக்க ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது ஒரு இயற்கை குடல் புழு நீக்க மருந்தாகும்.
 • பப்பாளிக் காயை துருவி சாறு எடுத்து, 1 டேபிள் ஸ்பூன் சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் நீர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 2 மணிநேரம் கழித்து, 250 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால், விரைவில் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறும்.
 • தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம், புழுக்களில் இருந்து விடுபடலாம். மேலும் பூண்டில் ஆன்டி-பாராசிடிக் பண்புகள் உடலில் உள்ள அனைத்து விதமான குடல் புழுக்களையும் அழிக்க உதவும்.
 • பூசணி விதைகள் நாடா புழுக்கள் மற்றும் உருளைப்புழுக்களை அழிக்க உதவும். பூசணி விதைகளை பொடி செய்து ஜூஸ் உடன் கலந்து உட்கொண்டு சில மணிநேரங்கள் கழித்து, பாலில் சில துளிகள் விளக்கெண்ணெய் கலந்து குடியுங்கள். இதனால் குடல் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.
 • ஓம விதைகளில் தைமோல் ஏராளமாக உள்ளதால்இது வயிற்றில் வளரும் புழுக்களின் வளர்ச்சியைத் தடுத்து வெளியேற்றும். மேலும் வயிற்று புழுக்களை அழிக்க ஓம விதைகளை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
 • தினமும் காலை உணவின் போது 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள். தேங்காய் சாப்பிட்ட 3 மணிநேரத்திற்கு பின், 375 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடியுங்கள்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers