மூட்டு வலியை போக்கும் சிறந்த ஆயுர்வேத வழிகள்

Report Print Jayapradha in மருத்துவம்

மூட்டு மற்றும் எலும்புகளில் ஏற்படும் நாள்பட்ட உட்காயங்களின் காரணமாக மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மோசமான உணவுப் பழக்கம் மற்றும் எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் இதற்கு காரணமாகும்.

மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு ஆயுர்வேதத்தில் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது. அந்த வகையில் வாதத்தால் ஏற்படும் மூட்டு வலியை குணப்படுத்த ஆயுர்வேதத்தில் உள்ள சிறப்பான வழிகளைப் பற்றி பார்ப்போம்.

மூட்டு வலியை போக்கும் ஆயுர்வேத வழிகள்?
 • சுடு தண்ணீர் மூட்டுகளில் தேங்கி உள்ள வாயுவை கலைத்து, சீரண சக்தியை அதிகமாக்கி, நச்சுக்களை வெளியேற்றும். எனவே தினமும் 1-2 டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும்.
 • நல்ல உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் நம் உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேறி மூட்டுகளில் வலியும் குறையும். எனவே தினமும் நல்ல ஆரோக்கியம் தரும் நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும்.
 • சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய் மூன்றும் திரிபுலா ஆகும். மூட்டு வலியின் வாதப் பிரச்சினைக்கு 2-5 கிராம் திரிபுலா சூரணத்தை, படுப்பதற்கு முன் சாப்பிட வேண்டும்.
 • 3-7 நாட்கள் மூலிகை நெய்யும், அடுத்து 7 நாட்களுக்கு மசாஜ் மற்றும் வேர்த்தல் சிகிச்சையும், 2-3 நாட்கள் செய்ய வேண்டும். இதனால் கபம் பித்த நோய், குடல் நோய், வாதம், மூட்டுவலி, சரும நோய் போன்றவை குணமாகும்.
 • பஞ்சகர்மா என்பது நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் சிகிச்சை முறை. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் அது உடலுக்கு தேவையான ஆற்றல், பசியை தூண்டும், செரிமானம் மற்றும் வாயு பிரச்சனைகளை தடுக்கும்.
 • வெதுவெதுப்பான நல்லெண்ணெய்யில் 2 மணி நேரம் குளிக்க வேண்டும். இதனால் அந்த எண்ணெய் சருமத்தில் ஊடுருவி வாதம் மற்றும் மூட்டுகளில் உள்ள வலியை குணமாக்கும்.
 • வமனம் என்றால் வாந்தி ஆகும். இந்த முறையில் சில மூலிகை பொருட்களின் மூலம் கஷாயம் சாப்பிட்டு, வாந்தி எடுத்தால், வயிறு சுத்தம், மார்புப் பகுதி நச்சுக்கள் போன்றவை வெளியேறிவிடும்.
 • விரேசனம் எனும் சிகிச்சை முறையில் பேதி மருந்தை சாப்பிட வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, மூட்டு வலி குறையும்.
 • அனுவாசன பஸ்தி எனும் சிகிச்சை முறையில், மருந்துகள் மற்றும் மூலிகைகள் மூலம் குடலை சுத்தம் செய்வது ஆகும். இதனால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அல்சர், கீழ்வாதம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
 • நஸ்யம் எனும் சிகிச்சை முறை மூலம் மூக்கில் சொட்டு மருந்து விட வேண்டும். இதில் மருந்து எண்ணெய், மூலிகை சாறு, நெய் போன்றவை பயன்படுகிறது. இதனால் மூக்கில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்.
 • பத்ர பிந்த ஸ்வேத எனும் சிகிச்சை முறையில், மூலிகை இலைகளை சிறு துண்டுகளாக்கி அதை வஸ்தகரா ஆயிலில் லேசாக வறுத்து அதனுடன் எலுமிச்சையை சேர்த்து ஒரு துணியில் கட்டி அதை வெதுவெதுப்பான மூலிகை ஆயிலில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...