உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை உடனே வெளியேற்ற இதனை செய்யுங்கள்

Report Print Kabilan in மருத்துவம்

நமது உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.

உடலில் சேர கூடிய அழுக்குகள் நமது உடலை விட்டு வெளியேறாமல் அப்படியே தங்கிவிடும். இதனை சுத்தம் செய்யவில்லையென்றால் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே சிலவகை உணவுகளை எடுத்துக்கொண்டு அழுக்குகளை வெளியேற்றுவது அவசியமாகும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை அதிக அளவில் உள்ளன. எனவே கல்லீரல் பகுதியில் சேர்ந்துள்ள நச்சுக்களை பீட்ரூட் வெளியேற்ற உதவும்.

வெள்ளரிக்காய்

உடல் முழுவதையும் சுத்தம் செய்யும் தன்மை வெள்ளரிக்காய்க்கு உண்டு. அத்துடன் வெள்ளரிக்காய் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க செய்யும். இதுவும் கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை இது வெளியேற்றும்.

ஜூஸ்

உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை சுத்தம் செய்ய இந்த ஜூஸ் பயன்படும். சிறு துண்டு இஞ்சி, சுடு தண்ணீர் சிறிதளவு, உப்பு ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு 2 தேக்கரண்டி, ஆப்பிள் சாறு 3 தேக்கரண்டி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

முதலில் மிதமான சுடு நீரில் உப்பை கலந்துகொள்ள வேண்டும். பின் இஞ்சியை நசுக்கி சாற்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஆப்பிள் ஜூஸ், எலுமிச்சை சாறு, உப்பு கலந்த நீர் ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள அழுக்குகள் எளிதில் வெளியேறிவிடும்.

வெங்காயம்

வெங்காயம் உடலை சுத்தம் செய்யக் கூடிய நொதிகளை உற்பத்தி செய்யும். உடலின் வயிற்றுப்பகுதி மற்றும் குடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை இந்த வெங்காயம் வெளியேற்றும்.

சீமை சாமந்தி டீ

உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்ற சாமந்தி டீ உதவும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ரத்தத்தில் சேர்த்துள்ள அழுக்குகளையும் முற்றிலுமாக இந்த டீ சுத்தம் செய்துவிடும்.

இஞ்சி

இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு பொருள் ஆகும். இதில் உள்ள சத்துக்கள் உடலில் இருந்து நச்சுக்களை எளிதில் வெளியேற்றி விடும். மேலும் கிருமிகள், ஒட்டுண்ணிகள், தொற்றுக்கள் ஆகிய அனைத்தையும் இஞ்சி அழித்துவிடும்.

கேரட்

பீட்டா கரோட்டின் நிறைந்துள்ள கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் வலுபெறும். அத்துடன் அழுக்குகள் உடலில் சேராமல் பார்த்துக்கொள்ளும்.

பூண்டு

பூண்டு உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதுடன், செரிமான கோளாறுகளையும் எளிதில் குணப்படுத்தும். எனவே, தினமும் பூண்டினை உணவில் சேர்த்து வர வேண்டும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்