உடைந்த எலும்பை வீட்டிலேயே ஒட்ட வைப்பது எப்படி? இதை செய்தாலே போதும்

Report Print Jayapradha in மருத்துவம்

எலும்பு முறிவு என்பது இயல்பாகவே தீர்க்கப்படும் ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சில எளிய வீட்டுத் வைத்திய முறைகளைப் பின்பற்றினால் மேலும் எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்படாமல் தடுக்க முடியும்.

விளக்கெண்ணெய்

 • விளக்கெண்ணெய்யில் உள்ள முக்கிய செயல்பாட்டு சேர்மங்களில் ஒன்று ரிசினோலிக் அமிலம் எலும்பு முறிவுடன் தொடர்புடைய வலியைக் குறைக்க உதவுகிறது.

 • ஒரு சிறிய துணியை விளக்கெண்ணெய்யில் ஊற வைத்து அதை பிழிந்து அந்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தைச் சுற்றி ஒத்தி எடுக்கவும். பின் அந்த துணியை ஒரு இரவு முழுவதும் அப்படியே விடவும்.இதனை தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.

கருஞ்சீரக எண்ணெய்

 • கருஞ்சீரக எண்ணெய் எலும்பு வலுவூட்டும் நடவடிக்கை, எலும்பு முறிவு சிகிச்சையில் இவை பெரிதும் திறம்பட உதவுகிறது.

 • ஒரு ஸ்பூன் எடுத்து சூட வைத்து பின் சூடான இந்த எண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவம். இதனை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை இதனை செய்யவும்.

மஞ்சள் பால்

 • மஞ்சளில் உள்ள குர்குமின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து அழற்சி எதிர்ப்பு தன்மையை வெளிப்படுத்துவதால் எலும்புகளில் உள்ளா வீக்கம் விரைவில் குறைக்கும்.

 • மேலும் ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தினமும் இரவு உறங்குவதற்கு முன் இதனை பருகினால் எலும்புகள் வலிமை பெறும்.

லாவெண்டர் எண்ணெய்

 • லாவெண்டர் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு தன்மையால் எலும்பு முறிவு உண்டான இடத்தில் வலியைக் குறைக்க உதவுகிறது.

 • இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் மூன்று அல்லது நான்கு துளிகள் லாவெண்டர் எண்ணெய்யை சேர்த்து கலந்து இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு நாளில் பலமுறை தடவினால் விரைவில் காயம் குணமாகும்.

எள்ளு

 • எள்ளில் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளதால் இவை வீக்கம் மற்றும் வலிக்கான அறிகுறிகளைக் குறைத்து எளிதில் குணமடைய வைக்க உதவுகிறது.

 • தினமும் வறுத்த எள்ளை ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய்யை தடவி வரலாம்.

தேங்காய் எண்ணெய்

 • தேங்காய் எண்ணெய்யை உடலுக்கு பயன்படுத்துவதன் மூலம் உங்கள் எலும்புகள் வலிமை அடைகிறது, எலும்புப்புரை நோயுடன் தொடர்புடைய எலும்பு இழப்பை தடுக்க உதவுகிறது.

 • மேலும் தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் நல்ல பலன் கிடைக்கும் வரை தொடர்ந்து தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

எப்சம் உப்பு

 • எப்சம் உப்பில் உள்ள மெக்னீசியம் உட்செலுத்துதல் வியக்கத்தக்க அழற்சி எதிர்ப்பு பண்புகளை அளிக்கிறது, இது வலி, வீக்கம், ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

 • ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீருடன் ஒரு கப் எப்சம் உப்பு சேர்த்து பிறகு உங்கள் பாதத்தை இந்த நீரில் 20-30 நிமிடங்கள் மூழ்கி இருக்கவும். இப்படி தினம் ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை சாறு

 • கற்றாழையில் அசிமெனன் என்ற பாலிசாக்கரைடு இருப்பதால், இயற்கை குணப்படுத்துதல் மற்றும் இதம் தரும் பண்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.

 • கற்றாழை ஜெல்லை வலி உள்ள இடங்களில் தடவினால் வலி மற்றும் வீக்கம் தற்காலிகமாக குறையும். மேலும் இதனை சில வாரங்களுக்கு தொடர்ந்து தினமும் ஒரு முறை இந்த சாற்றைப் பருகலாம்.

குறிப்புகள்

 • எலும்பு முறிவு முற்றிலும் குணமடையும் வரை பாதிக்கப்பட்ட இடத்தில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

 • வைட்டமின் டி சத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் சூரிய ஒளியை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். இது எலும்பு வலிமை அடைவதற்கு முக்கிய ஊட்டச்சத்தாகும்.

 • உடற்யிற்சிகளான சிறிய அளவு பளு தூக்குதல், ஸ்கிப்பிங், நடைபயிற்சி, ஓட்டப் பயிற்சி போன்ற உடல் சார்ந்த செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

 • புகை பிடிக்க வேண்டாம். மது அருந்துவதை குறைத்துக் கொள்ளவும்.எலும்பு முறிவு முற்றிலும் குணமடைந்த பின்னும் அந்த இடத்தின் அதிக பயன்பாட்டை தவிர்க்கவும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers