35 வயதைக் கடந்தவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இதை படிங்க

Report Print Jayapradha in மருத்துவம்

நோய் வந்தபின்னர் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு கஷ்டப்படுவதை விட வருமுன் காப்பதே சிறந்தது.

பொதுவாக 35 வயது வரை உணவில் எந்தவொரு கட்டுப்பாடும் வைத்துக் கொள்ள தேவையில்லை.

ஆனால் 35 வயதை கடந்தவுடன் வருடத்திற்கு ஒருமுறையாவது உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

சீரான உணவு பழக்கவழக்கங்களும், ஆரோக்கியமான உணவுகளும் உடற்பயிற்சிகளும் நோய் அண்டவிடாமல் தடுக்கின்றது.

35 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வராமல் தடுக்க உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம்.

அரிசியில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

கேழ்வரகு போன்ற தானிய வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம், வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்வதும் நல்லது, நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

தினமும் காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பது நீரிழிவு நோய் தவிர மற்ற நோய்களிலிருந்தும் நம்மை காப்பாற்றும்.

அத்துடன் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம்.

இதேவேளை, வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோய் குணமாகும்.

ஒருவேளை சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் ஒரு டம்ளர் அருகம்புல் சாறு அருந்துவது நல்ல பலனை கொடுக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...