தினமும் காலையில் நீரில் மிளகுத் தூள் கலந்து குடியுங்கள்! நன்மைகள் ஏராளம்

Report Print Jayapradha in மருத்துவம்

நம் வீட்டின் சமையலறையில் இருக்கும் ஓர் அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த பொருள் தான் மிளகு. இந்த மிளகை தினமும் சமையலில் சேர்த்து வந்தால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அத்தகைய மிளகைப் பொடி செய்து நீரில் கலந்து தினமும் இருவேளை குடித்து வந்தால் நம் உடலில் பல அதிசயக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம்.

மிளகு தண்ணீர் தயாரிப்பது எப்படி?
  • ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அதில் 2 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின் அத்துடன் 1 சிட்டிகை உப்பு மற்றும் 1-2 ரோஜாப்பூ இதழ்களை சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி சிறிது தேன் கலந்து குடிக்க வேண்டும்.
  • இப்படி தினமும் இரு வேளை குடித்து வர நீண்ட நாட்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்.

மிளகு தண்ணீர் நன்மைகள்
அதிக ஆற்றலை பெற
  • உடலில் அதிகமாக வியர்வை வெளியேறுவதன் மூலம் உடலின் ஆற்றல் குறையும். மேலும் தினமும் இந்த மிளகு நீரைக் குடிப்பதால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவும்.
மலச்சிக்கல் பிரச்சனை
  • மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்க வேண்டுமானால் மிளகு நீரை தினமும் இரண்டு வேளைப் பருகி வருவதின் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும்.
உடல் வறட்சியைப் போக்க
  • உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால் உடலுறுப்புக்களின் செயல்பாடு குறைந்து மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். ஆனால் மிளகு நீரை காலையில் ஒரு டம்ளர் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் என பருக உடல் வறட்சியைத் தடுக்கலாம்.
உடல் எடை குறைய
  • மிளகில் உள்ள காரத்தன்மை, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, குறைந்த காலத்தில் அதிக கலோரிகளை வேகமாக கரைக்க உதவும். எனவே எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த மிளகு நீர் ஓர் சிறந்த பானம்.
பசியைக் கட்டுப்படுத்த
  • மிளகு நீரை ஒருவர் தினமும் 2 வேளை பருகினால், பசியைக் கட்டுப்படுத்தி, உணவின் மீதுள்ள அதிகப்படியான நாட்டத்தைக் குறைக்கும்.
எலும்புகளின் வலிமைக்கு
  • எலும்பு பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 டம்ளர் மிளகு நீரைக் குடிப்பது, எலும்புகளுக்கு நல்ல பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.
புற்றுநோயை தடுக்கும்
  • மிளகு நீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி புற்றுநோய் மற்றும் நீரிழிவைத் தடுக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers