வேர் முதல் நுனி வரை மருத்துவம்! இந்த பூவின் அற்புதங்கள் தெரியுமா?

Report Print Fathima Fathima in மருத்துவம்

அரிய வகை பூக்களில் ஒன்றான சங்கு பூவிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை பல நோய்களை தடுக்கும் சக்தி சங்கு பூக்கு உண்டு.

வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் காணப்படும் சங்கு பூ, பண்டைய கால சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சங்கு பூ டீ தயாரிக்கும் முறை
  • தண்ணீர் 2 கப்
  • சங்கு பூ 5
  • எலுமிச்சை சாறு, தேன்

முதலில் நீரை நன்கு கொதிக்க விட்டு, அதில் சங்கு பூவை சேர்த்து 5 நிமிடம் கழித்து எடுத்து கொள்ளவும்.

பின் அவற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து கொண்டு குடித்து வரலாம், இதனை சூடாகவும், குளிர்ந்த நிலையிலும் குடிக்கலாம்.

பயன்கள்
  • உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
  • சங்கு பூவின் விதைகள் மற்றும் வேர்களை பயன்படுத்தி, கஷாயம் தயாரித்து குடித்து வந்தால் இதய கோளாறுகள் நீங்கும்.
  • சங்கு பூவில் உள்ள ஃப்ளேவனாய்ட்ஸ் புற்றுநோய் செல்களை உடலில் உருவாகாமல் தடுக்கிறது.
  • கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • ஜீரண கோளாறுகள், வயிற்று எரிச்சல் போன்றவற்றையும் இது சரி செய்யும்.
குறிப்பு

கர்ப்பிணி பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று பருக வேண்டும், சர்க்கரை நோயாளிகளும் இதை குடிப்பதற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers