குடலில் தொந்தரவு செய்யும் புழுக்களை அழிக்க வேண்டுமா? இதை செய்யுங்க

Report Print Jayapradha in மருத்துவம்

குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது மேலும் குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும்.

நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான மருந்துகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் குடலில் வாழும் புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன.

குடல் புழுக்களை அழிக்க செய்ய வேண்டியவை

 • தினமும் காலை உணவின் போது 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள். தேங்காய் சாப்பிட்ட 3 மணிநேரத்திற்கு பின், 375 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடியுங்கள்.

 • தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம், புழுக்களில் இருந்து விடுபடலாம். மேலும் பூண்டில் ஆன்டி-பாராசிடிக் பண்புகள் உடலில் உள்ள அனைத்து விதமான குடல் புழுக்களையும் அழிக்க உதவும்.

 • பப்பாளிக் காயை துருவி சாறு எடுத்து, 1 டேபிள் ஸ்பூன் சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் நீர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 2 மணிநேரம் கழித்து, 250 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால், விரைவில் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறும்.

 • பூசணி விதைகள் நாடா புழுக்கள் மற்றும் உருளைப்புழுக்களை அழிக்க உதவும். பூசணி விதைகளை பொடி செய்து ஜூஸ் உடன் கலந்து உட்கொண்டு சில மணிநேரங்கள் கழித்து, பாலில் சில துளிகள் விளக்கெண்ணெய் கலந்து குடியுங்கள். இதனால் குடல் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.

  ஓம விதைகளில் தைமோல் ஏராளமாக உள்ளதால்இது வயிற்றில் வளரும் புழுக்களின் வளர்ச்சியைத் தடுத்து வெளியேற்றும். மேலும் வயிற்று புழுக்களை அழிக்க ஓம விதைகளை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

 • மாதுளை மரப்பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரை ஒரு நாளைக்கு மூன்று வேளை குடிக்க, குடல் புழுக்கள் அழிந்து வெளியேறும்.

 • வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் புழுக்களை அழிக்கும் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

 • கேரட்டுகளில் உள்ள பீட்டா-கரோட்டின், உடலில் இருந்து புழுக்களை வெளியேற்றும். மேலும் கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும்.

 • ஒரு கிராம்பை தினமும் வாயில் போட்டு மென்று விழுங்குங்கள்.கிராம்பில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் புழுக்களை அழிக்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது.

 • கற்றாழை இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரைக் குடித்து வர வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து, உடலில் இருந்து வெளியேற்றப்படும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்