வெங்காயம் மற்றும் பூண்டு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

Report Print Jayapradha in மருத்துவம்

வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டும் சிறந்த உணவுகளாக கருதப்படுகிறது. மேலும் வெங்காயம் மற்றும் பூண்டின் பயன்பாடு சமையலறையில் இன்றியமையாதது.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. மேலும் இவை நம் உடலுக்கு ஊட்டச்சத்து தருகிறது.

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது.பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும்.

பூண்டின் நன்மைகள்

 • மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும் அலர்ஜி நீங்கிவிடும்.

 • தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டால் ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் என எதுவும் வராது.

 • பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.

 • பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

 • வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
 • சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால் சர்க்கரை அளவை சீராக்குகிறது. இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.

வெங்காயத்தின் நன்மைகள்

 • நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

 • வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

 • வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.

 • அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

 • யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

 • வெங்காயத்தில் உள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது

ஆயுர்வேதத்தில் வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது ஏன்?

 • வெங்காயம் மக்களை எரிச்சலூட்டுகிறது எனவும், மற்றும் பூண்டு தூக்கமின்மை மற்றும் ஆற்றல் அற்றவை எனவும் அறியப்படுகிறது.

 • அதாவது இந்த பொருட்கள் உடலில் அதிக வெப்பத்தை உண்டாக்குகின்றன. உடலுக்கு சில அளவு வெப்பம் தேவை என்றாலும், அதிக வெப்பத்தின் காரணம் மட்டுமே சுகாதார பிரச்சினைகள் ஏற்படுத்த வழிவகுக்கும்.

 • ஆயுர்வேதத்தில் இவை இரண்டும், ஒரு நபரின் கவனம் மற்றும் கவனத்தை திசை திருப்பும் நம்புகின்றனர்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...