மூக்கில் அடிக்கடி இரத்தம் வழிகிறதா? இதை செய்யுங்க

Report Print Jayapradha in மருத்துவம்

சுவாசித்தலில் மிக முக்கிய பங்கு வகிப்பது மூக்கு. மேலும் ரத்த நாளங்களில் மிகவும் மென்மையானது மூக்குப்பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் தான்.

அதிக குளிர் மற்றும் அதிக வெயில் ஆகிய இவை இரண்டும் தான் மூக்கில் இரத்தம் வருவதற்கு மிக முக்கியமான காரணம்.

அடிக்கடி மூக்கில் இரத்தம் வருவது ஒரு சிலருக்கு சாதாரண பிரச்சினை என்றாலும் மூக்கில் இருந்து இரத்தம் வரும் அந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

மூக்கில் இரத்தம் வர காரணங்கள்
 • கடுமையான சளி பாதிப்பால், எப்போதும் நீர் வடிந்துகொண்டிருக்கும், மூக்கில் உள்ள சவ்வுகளில் ஏற்படும் பாதிப்பால், இரத்தம் மூக்கிலிருந்து வெளியேறும்.
 • வெயில் காலங்களில் உள்ள கடுமையான வெப்பத்தினால், மூக்கின் சவ்வுகளில் ஏற்படும் வெடிப்புகளால், மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது.
 • உடல் வலி மற்றும் இதர காரணங்களுக்காக உபயோகிக்கும் ஆஸ்பிரின் உள்ளிட்ட மாற்று மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்தாலும், மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறக்கூடும்.
 • ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் அதிக வெப்பத்தை வெளியிடக்கூடியவ.அதன்கீழ் அதிக நேரம் இருப்பவர்களுக்கும் மூக்கில் ரத்த் வடிதல் உண்டாகலாம்.
 • உடலில் நோயெதிதிர்ப்பு சக்தி குறைந்து போய், இரத்த சோகை மற்றும் இரத்த அழுத்த பாதிப்புகள் உள்ளவர்களுக்கும், மூக்கிலிருந்து இரத்தம் வடியக்கூடும்.
 • அதிக வெப்பம் மிகுந்த காற்றை சுவாசிப்பவர்களுக்கும் மூக்கில் இரத்தம் வடியலாம்.
மூக்கில் இரத்தம் வருவதை தடுக்க
 • மூக்கில் இரத்தம் வரும் போது, ஒரு துணியில் ஐஸ்கட்டிகளை வைத்து கட்டி மூக்கின் மேல் சில நிமிடங்கள் வைக்க வேண்டும்
 • மூக்கில் இரத்தம் வரும்போது, தர்ப்பை புல் சாறை, சில துளிகள் மூக்கில் விட, இரத்தம் வெளியேறுவது நிற்கும்.
 • மாதுளம்பூ சாறெடுத்து கடுக்காய் சூரணத்துடன், தேன் கலந்து, பருகி வரலாம், அல்லது மாதுளம்பூ நன்கு முகர்ந்தாலோ, மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறுவது நிற்கும்.
 • வைட்டமின் சி உணவுகளை உட்கொள்வது இரத்த நாளங்களை வலுவானதாக்க உதவுகிறது. அதனால் மூக்கில் இரத்தம் வடிவதை தடுக்க நிரந்தர தீர்வாகிறது.

  • மஞ்சளைத் தேனில் குழைத்து, மூக்கின் மேல்புறம் தடவி வர, இரத்தம் வெளியேறுவது நின்றுவிடும்.
  • தினமும் போதுமான அளவு நீர் குடிக்கவும். குறைவாக நீர் குடித்தல் கூட மூக்கில் இரத்தவடிய காரணமாகி மூக்கின் சளி சவ்வுகளில் வறட்சி ஏற்படலாம்.
  • சோற்றுக் கற்றாளை ஜெல்லை மெல்லிய துணியில் கட்டி, மூக்கினுள் சற்றுநேரம் வைத்துவர, இரத்தக் கசிவு நின்றுவிடும்.
  செய்யகூடாதவை:
  • மூக்குக்குள் கைவிரல்களை விட்டு ஆராய்ச்சி செய்வது, பேனா,பெண்சில் போன்ற பொருள்களை மூக்கினுள் விடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • அதிக எடைகொண்ட பொருளைத் தூக்குதால் கூடாது. இதனால் மூக்கில் இரத்தக் கசிவை, மீண்டும் ஏற்படுத்தும்.
  • அதிக சூடு மற்றும் அதிக குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதும், அதே நிலையில் உள்ள பானங்களைப் கூடிக்க கூடாது.

  மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

  Latest Offers

  loading...