சிறுநீருடன் ரத்தம் வெளியேறுகிறதா? உஷார்

Report Print Jayapradha in மருத்துவம்

சிறுநீரகத்தில் இருந்து வெளிவரும் சிறுநீர் என்பது நமது உடலில் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகளை வெளிக்காட்டும் கண்ணாடி. உடலுக்குள் எந்த நோய் ஏற்பட்டாலும் அதன் அறிகுறியை சிறுநீர் காட்டிக் கொடுத்துவிடும்.

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றத்தால் உலகளவில் ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு சிறுநீரகம் சம்மந்தமான வியாதிகள் வருவதாக ஆய்வுகள் கூறுகிறது. அத்தகைய சிறுநீரக பிரச்சனைகளில் ஒன்று சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதால் தான்.

சிறுநீருடன் ரத்தம் வெளியேறுவதற்கான காரணங்கள்.
  • சிறுநீர் பாதைகளில் தொற்று ஏற்பட்டால் சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறும்.
  • தினமும் போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்காமால் இருப்பது மற்றும் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டவுடன் கழித்து விடமால் இருப்பதும் சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறும்.
  • பெரியவர்களுக்கு சிறுநீரகம், சிறுநீரகப் பாதை, சிறுநீர்ப் பை, சிறுநீர் வடிகுழாய் ஆகியவற்றில் புற்றுநோய் இருந்தாலும் ரத்தம் கலந்து அடர்சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.
  • கடினமான உடற்பயிற்சி செய்வதால் சிறுநீரக மண்டலத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் சிதைந்து ரத்தக் கசிவு ஏற்படலாம்.
  • சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் கற்கள் ஜவ்வுத் திசுக்களோடு உரசி ரத்தம் கசிந்து சிறுநீருடன் வெளியேறும்
  • போதை மாத்திரைகள், ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரண மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தால் அவை ரத்தத்தட்டணுக்களின் உறையும் தன்மையைக் குறைத்துவிட்டு ரத்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டு சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறும்.
பிரச்சனைகள்
  • சிறுநீர் வழியே ரத்தம் வெளியேறும்போது ரத்த இழப்பு ஏற்படும். அதனால், ரத்தச் சோகை வரும். மேலும், ரத்த அழுத்தம் குறைந்து மயக்கமும் வரலாம்.
  • சிறுநீரோடு கட்டி கட்டியாக ரத்தம் வெளியேறினால் சிறுநீர் வடிகுழாயில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.
  • காலையில் தூங்கி எழும்போது கண்களைச் சுற்றி வீங்குதல், உடல் உப்புசமாகி எடை கூடுதல், ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பது போன்றவைகளும் அடங்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers