தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்

Report Print Jayapradha in மருத்துவம்

அமுதக்கனிகளில் ஒன்று நெல்லிக்காய். அத்தகைய நெல்லிக்காயை தினமும் நாம் சாப்பிட்டல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு பெருகும், என்றும் இளமையுடன் இருக்கலாம்.

நெல்லிக்காய் எப்படியோ அப்படித்தான் தேன் ஒரு அமுத சுவையும் பல உயிர்ச்சத்துக்களும் கொண்டவை.

இத்தகைய அற்புத சத்துக்களைக் கொண்ட நெல்லிக்காயையும், தேனையும் கலந்து சாப்பிட்டால் வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

நன்மைகள்
  • தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகையை கட்டுப்படுத்தும்.
  • இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வருவதை தடுக்கலாம்.
  • கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாக்க தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம்.
  • அதிகப்படியான வெள்ளைப்படுதலால் அவதிப்படும் பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், இதனை தடுக்கலாம்.
  • உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும், முடி கொட்டுவது நிற்கும்.
  • பெண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் முகத்தில் பொலிவு அதிகரித்து சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.
  • சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும், அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...