உடலில் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டுமா? தினமும் இதனை சாப்பிட்டே ஆக வேண்டும்

Report Print Kabilan in மருத்துவம்
449Shares
449Shares
lankasrimarket.com

உடலில் ரத்தம் உறைவதனால், உறுப்புகளுக்கு ரத்தம் பாய்வதில் தாமதம் ஏற்பட்டு கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.

ரத்தம் உறைதல்

ரத்தம் உறைதல் என்பது குறிப்பிட்ட இடத்தில் ரத்த சிவப்பு அணுக்கள் ஒன்று சேர்வது ஆகும். இது ரத்தக்கட்டு என்றும் கூறப்படுகிறது. இது உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானலும் ஏற்படலாம்.

தமனிகளில் ரத்தம் உறைவது ஏற்பட்டால், மாரடைப்பு மற்றும் பக்க வாதம் போன்ற அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

உடலில் ரத்தம் உறையாமல் இருக்க, தினமும் சில வகை உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகை உணவுகள் குறித்து இங்கு காண்போம்.

ஆளி விதைகள்

ஆளி விதைகள் பல்வேறு தாதுக்கள் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களின் ஒரு களஞ்சியம் என்றே கூறலாம். ஒரு கைப்பிடி அளவு ஆளி விதைகளை உண்வதன் மூலம், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.

சாலடுகள், மிருதுவான பானங்களில் இந்த விதைகளை சேர்த்து உண்ணலாம். எனினும், இவற்றை அளவாக உண்ண வேண்டும்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாயில் சாலிசிலேட்டுகள் நிறைந்திருக்கின்றன. இதன் மூலம் ரத்தம் உறைவதை தடுக்க முடியும். இது இயற்கையான ரத்த மெலிவூட்டி ஆகும். எனினும், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூளைக் கொண்டு பல்வேறு சிறிய மற்றும் பெரிய உடல் பிரச்சனைகளை தடுக்க முடியும். மஞ்சளில் குர்குமின் அதிகம் உள்ளதால், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களுடன் இணைந்து இது ரத்தத்தை உறைய வைக்கும் காரணிகளை நீக்கும்.

ரத்தம் கட்டிக்கொள்வதால் ஏற்படும் வலியையும் குர்குமின் தடுக்கிறது. ரத்தக் கட்டிற்கு சிகிச்சை பெற சூடான பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து, உண்டு வர வேண்டும்.

சியா விதைகள்

சியா விதைகளில் ஏராளமான அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. இந்த இரண்டு கூறுகளுமே உடலில் ரத்தக் கட்டு ஏற்படாமல் தடுக்கும் வல்லமை பெற்றவை.

சியா விதைகளை தினமும் எடுத்துக் கொண்டால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து, ரத்தம் உறைவது தடுக்கப்படும்.

நெல்லிச்சாறு

நெல்லிக்காய் சாறு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாகும். இதில் உள்ள வைட்டமின் C மற்றும் இரும்புச்சத்து ரத்தக் கட்டை சரி செய்து, உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கும்.

இலவங்கப்பட்டை தேநீர்

பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு வெளி மற்றும் ரத்த உறைதலை சரி செய்யும் பொருளாக இலவங்கப்பட்டை உள்ளது. தினமும் புதிதாக காய்ச்சிய இலவங்கப்பட்டை தேநீரை பருகி வர, ரத்த ஓட்டம் சீராகும். உணவிலும் இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால், இந்த தேநீரை அதிகமாக பருகினால் குமட்டல், வாந்தி, சிறுநீரக பாதிப்புகள் உண்டாகும்.

வெங்காயம்

வெங்காயத்தில் இயற்கையாகவே மெலிவூட்டும் பண்பு உள்ளது. இது சுருங்கிய தமனிகளை விரிவுப்படுத்தி தடையில்லாமல் ரத்தம் பாய உதவுகிறது. எனவே, இதய கோளாறு உள்ளவர்கள் ஒவ்வொரு வேலை உணவுடனும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.

மேலும், வெங்காயத்தை உங்களது சாலட்டிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

கீரை சாறு

கீரைச்சாற்றில் வைட்டமின் K நிறைந்துள்ளது. உடலில் இந்த வைட்டமின் K தேவையான அளவு இருந்தால், ரத்தம் உறைவது தடுக்கப்படும். கீரையை சாலட், சூப் அல்லது மிருதுவான பானங்கள் போன்றவற்றுடன் கலந்து உண்ணலாம்.

இஞ்சி டீ

இஞ்சியில் உள்ள அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் என்ற Active Compound உள்ளது. இந்த கலவை மூலம் ரத்த கட்டு நீக்கப்படுகிறது. ஒருநாளைக்கு இருமுறை இஞ்சி டீ பருகினால், ரத்தம் உறைவதை தடுக்கலாம்.

கற்பூரவல்லி

கற்பூரவல்லியில் ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. தட்டணு திரட்டலை குறைக்க கற்பூரவல்லி வெகுவாக பயன்படுகிறது. கற்பூரவல்லியை உட்கொண்டால் ரத்தக்கட்டை சரிசெய்யலாம். இந்த மூலிகையை வித விதமான உணவுகளிலும் சாலட்டுகளிலும் சேர்த்து உண்ணலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்