அனைத்து உடல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் ஒரே அற்புத மருந்து!

Report Print Kabilan in மருத்துவம்

உடலில் உள்ள பல பிரச்சனைகள் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால், நாம் செய்யும் வேலைகளிலும் அதன் தாக்கம் வெளிப்படும்.

உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அருமருந்தாக ‘திரிபலா’ உள்ளது. திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் சேர்ந்த கூட்டுப்பொருள் ஆகும். இது பாரம்பரியம் சார்ந்த ஆயுர்வேத மருந்து ஆகும். இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது.

இந்த திரிபலா நமது உடலியக்கத்தில் பிரச்சனைகளை கொடுக்கும் பல வியாதிகளை போக்குதன்மை கொண்டது. இதன் பயன்கள் குறித்து இங்கு காண்போம்.

புற்றுநோய்

திரிபலாவில் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை உள்ளது. புற்றுநோய் செல்களில் உள்ள மைட்டேக், ஸ்பிண்டில் வடிவத் தோற்றத்திற்கு மாறுவதை திரிபலா தடுக்கிறது. மேலும், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

திரிபலா முதுமைத் தன்மையை நீக்கி இளமையை அதிகரிக்க செய்யும். மேலும் இது உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

நமது உடலில் நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'Antibodies' எனப்படும் நோய் எதிப்பு சக்தியை, திரிபலா அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.

ஆண்டி-ஆக்ஸிடண்ட்

நமது உடலில் முதுமையை தரும் முக்கிய காரணி Free Radicals ஆகும். இவை உடலில் உற்பத்தியாவதை திரிபலா தடுக்கிறது. அத்துடன், உடலில் செல்களுக்கு இடையே நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடண்டாக திரிபலா செயல்படுகிறது.

மேலும், செல்கள் முறையாக செயல்பட தேவையான மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவற்றை திரிபலா தூண்டுகிறது.

செரிமான கோளாறு

திரிபலா, உணவுப்பாதையில் மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்க உதவுகிறது. அத்துடன் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க தேவைப்படும் Bile திரவத்தை கல்லீரலில் இருந்து சுரக்கவும் உதவுகிறது. திரிபலா செரிமானக் கோளாறை சரிசெய்யும் சிறந்த மருந்து ஆகும்.

குடல் சுத்திகரிப்பு

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பான் ஆகும். இயற்கை மருந்தான இது, உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கி குடலை சுத்தப்படுத்தும். மேலும், ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் திரிபலா செயல்படுகிறது.

தொற்று நீக்கி

திரிபலா ஒரு தொற்று நீக்கியாகும். வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் இது வெகுவாக கட்டுப்படுத்தும். குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் இது வெளியேற்றும். மேலும், உடலில் பூச்சிகள் மற்றும் நுண்கிருமிகள் வளர்வதை தடுக்கும் தன்மை கொண்டது திரிபலா.

ரத்தசோகை

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க திரிபலா பெரிதும் உதவும். இதன்மூலம் ரத்தசோகை நோய் எளிதில் தீரும்.

சர்க்கரைநோய்

நமது உடலில் உள்ள கணையத்தை திரிபலா தூண்டுவதன் மூலம், இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். இதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். அத்துடன் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ளவும் திரிபலா உதவுகிறது.

உடல்பருமன்

திரிபலாவை உட்கொள்வதன் மூலம் உடல் பருமன் குறையும். இதில் உள்ள மருத்து குணங்கள் உடலிளுள்ள கொழுப்பின் அளவை குறைக்கும். மேலும், நமது உடலில் கொழுப்பு படிவதற்கு காரணமான அடிபோஸ் செல்களின் அளவை வெகுவாக குறைக்கும்.

சரும பிரச்சனைகள்

திரிபலா ரத்தத்தினை சுத்தம் செய்து, நச்சுப்பொருட்களை வெளியேற்றும். இதன் மூலம் சரும பிரச்சனைகள் தீரும். மேலும் ரத்த சுத்திகரிப்பினால் தொற்று நோய்களும் தீரும்.

சுவாச கோளாறுகள்

சுவாசப் பாதையில் உள்ள அடைப்புகளை திரிபலா நீக்கும். அதன் மூலம், சீரான சுவாசம் ஏற்பட்டு சைனஸ் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும். மேலும், சுவாசப்பாதையில் உள்ள சளியால் பாக்டீரியாக்கள் வராமலும் திரிபலா தடுக்கும்.

தலைவலி

தலைவலிக்கு நிவாரணமாக திரிபலா பயன்படும். குறிப்பாக வளர்ச்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலி திரிபலா குணப்படுத்தும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...