அல்சர் நோயை விரைவில் போக்கும் மருத்துவம்

Report Print Printha in மருத்துவம்

வயிற்றில் ஏற்படும் அல்சர் பிரச்சனையை எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் இயற்கையான முறையில் குணமாக்க சில பாட்டி மருத்துவங்கள் இதோ,

அல்சரை குணமாக்க உதவும் மருத்துவம்
  • மணத்தக்காளி கீரையை அடிக்கடி சூப் அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் விரைவில் குணமாகும்.
  • அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வர, விரைவில் வயிற்றில் உள்ள புண் குணமாகும்.
  • பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து வயிற்று புண் விரைவில் ஆறிவிடும்.
  • தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வருவதன் மூலம், அல்சரால் ஏற்படும் கடுமையான வயிற்று வலியை குறைக்கலாம்.
  • பாகற்காயை பழுக்க வைத்து சமைத்து சாப்பிட்டால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழிந்து குடல் வலிமையாகும்.
  • வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டு வர, அல்சர் மற்றும் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
  • தண்டுக் கீரையில் இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடல்புண் ஆறும்.
  • அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தாலே போதும். விரைவில் அல்சரை குணமாக்கலாம்.
  • தினமும் 1 கப் அகத்திக்கீரையை சமைத்து அலல்து சூப் செய்து சாப்பிட்டு வர அல்சர் விரைவில் நீங்கும்.
  • வயிற்று அல்சருக்கு நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்