வெறும் 10 மிளகு இருந்தாலே போதும்: இதை கட்டாயம் படியுங்கள்

Report Print Printha in மருத்துவம்

காரச்சுவை கொண்ட மிளகு கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

இத்தகைய மிளகு பல்வேறு உடல்நலக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

மிளகின் மருத்துவ குணங்கள்
  • மிளகு, பெருங்காயம், சுக்கு, திப்லி, சோம்பு ஆகிய அனைத்தையும் பொடி செய்து, அதனுடன் உப்பு மற்றும் 1 டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.
  • மிளகு, சுக்கு, திப்லி ஆகியவை சாப்பிட்டு வந்தால் சிறுநீர்பாதையில் ஏற்படும் வலி, மார்பு வலி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
  • மிளகுப் பொடி, சோம்பு பொடி ஆகியவற்றை கலந்து, அதனுடன் சிறிது நீர்விட்டு வேக வைத்த பின் அதில் தேன் கலந்து இருவேளையும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும்.
  • சிறிய வெங்காயத்தின் சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பு, மிளகுப்பொடி சேர்த்து அதை புழுவெட்டு இருக்கும் இடத்தில் பஞ்சினால் தேய்த்து வர புழுவெட்டு மற்றும் முடி உதிர்வு சரியாகும்.
  • மிளகை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் வியர்வையால் உண்டாகும் கடுமையான துர்நாற்றம் நீங்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்