கொப்புளத்தில் இருந்து பரவும் சிரங்கு புண்: எப்படி குணமாக்கலாம்?

Report Print Printha in மருத்துவம்

சிரங்கு புண் என்பது ஒரு நாள்பட்ட தோல் நோய், இந்த நோய் வந்தால், பாதிக்கப்பட்ட இடத்தில் கடுமையான அரிப்பு ஏற்படும்.

இந்த நோயை நுண்ணுயிர்கள் ஏற்படுத்துகின்றது, அந்த நுண்ணுயிர்கள் சருமத்தை மெதுவாக துளையிட்டு ஆங்காங்கு கொப்புளங்கள் போன்று உருவாக்குகிறது.

அதிலும் இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. இத்தகைய நோயை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்தலாம்.

சிரங்கு நோயை குணமாக்குவது எப்படி?

  • சிரங்கு உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி, வந்தால், அது தோலை மிகவும் மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றும்.

  • 1 டீஸ்பூன் சந்தனம் மற்றும் 1 டீஸ்பூன் கற்பூரம் ஆகிய இரண்டையும் சேர்த்து சிரங்கு புண் இருக்கும் இடத்தில் தடவினால் அரிப்பு குணமாகும்.

  • 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் வேப்பிலை இலையை சேர்த்து அரைத்து, அந்த கலவையை சிரங்கின் மேல் தடவி வர விரைவில் குணமடையும்.

  • ஒரு நாளைக்கு 2 முறைகள் குளிர்ந்த நீரால் அரிக்கும் இடத்தில், ஒத்தடம் கொடுத்தால் அரிப்பு ஏற்படுவது சற்று குறையும்.

  • பாதாம் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பிசைந்து, அதை சிரங்கு பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வரலாம்.

  • கடுகு எண்ணெய் மற்றும் வேப்பிலையை நீருடன் சேர்த்து, கொதிக்க வைத்து அது குளிர்ந்த பின் தினமும் 4 முறை சிரங்கு புண்ணில் தடவ வேண்டும்.

  • பப்பாளி பழத்தின் விதையை நன்றாக பிசைந்து, அந்த விழுதை எடுத்து சிரங்கு புண் உள்ள இடத்தில் தடவி வந்தால் புண் அரிப்பு சரியாகும்.

  • புதினா இலையை கையில் பிழிந்து அந்த சாற்றை எடுத்து சிரங்கு புண் உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  • 3 கேரட்டை நன்றாக வேகவைத்து பிசைந்து அதை 15 நிமிடம் வரை சிரங்கு பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

  • குளித்து முடித்த பின் சிரங்கு புண் இருக்கும் இடத்தில் ஆலிவ் ஆயிலை கொண்டு தடவி வந்தால், அந்த புண் விரைவில் குணமாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்