அல்சரால் அவதியா? இதோ இயற்கை தீர்வுகள்

Report Print Printha in மருத்துவம்

வயிற்றில் ஏற்படும் புண் சில நேரத்தில் வயிறு, சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகளை பாதிக்கும், இதனால் தீவிரமான வயிற்று வலி உண்டாகும்.

இப்பிரச்சனைகளை குணமாக்க சிறந்த இயற்கை வழிகள் உள்ளது.

அல்சரை குணமாக்குவது எப்படி?

  • அல்சர் உள்ளவர்கள் குளிர்ந்த பால் குடித்தால் வயிற்று வலி குறைந்து வயிற்றில் ஏற்படும் எரிச்சலும் நீங்கும்.

  • உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம், ஒருவேளை அல்சர் நோயாளிக்கு நெய் ஜீரணமம் அடையா விட்டால் நெய்யை வெந்நீருடன் சேர்த்து சாப்பிடலாம்.

  • பாலுடன் 2-3 வாழைப் பழங்களை சேர்த்து சாப்பிடலாம், அதுவும் மஞ்சள் வாழைப் பழத்தை விட பச்சை வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

  • நெல்லிக்காய் சாறை சர்க்கரை உடன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் அல்சர் பிரச்சனைக்கு நல்ல பலனைக் காணலாம்.

  • தோல் நீக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் தயாரிக்கப்பட்ட பாலை குடித்து வந்தால் அல்சர் விரைவில் குணமாகும்.

  • அரிசியை நன்கு உடைத்து அதில் தண்ணீரை அதிகமாக சேர்த்து, கஞ்சி போல் தயாரித்து குடித்து வந்தால் அல்சர் பிரச்சனை தீரும்.

  • பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து அல்சர் உள்ளவர்கள் சாப்பிட்டு வரலாம்.

  • தினமும் மாதுளம் பழச்சாறு குடிக்கலாம். அல்லது திரிபாலா சூரணம், 1 ஸ்பூன் நெய், 1/2 ஸ்பூன் தேன் அகிய அனைத்தையும் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

  • கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்து அதில் தண்ணீரை அதிகளவு சேர்த்து கொதிக்க வைத்து இரவு ஊற வைத்து மறுநாள் காலையில், அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

குறிப்பு

அல்சர் உள்ளவர்கள் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா பொருட்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்