தேனீ, வண்டு கடியால் வலியா? இதை உடனே செய்திடுங்கள்

Report Print Printha in மருத்துவம்

தேனீ அல்லது வண்டு போன்ற விஷப்பூச்சிகள் கடித்து விட்டால் தாங்க முடியாத வலி மற்றும் வீக்கம் உண்டாகும். இதனை இயற்கை வழியில் குணமாக்க சில பாட்டி வைத்தியங்கள் இதோ,

தேனீ, வண்டு கடியின் வலியை போக்குவது எப்படி?
  • வாழை இலையின் சாறு எடுத்து, அதை வலி இருக்கும் இடத்தில் தடவினால் வலி கட்டுப்படுத்தப்பட்டு, வீக்கம் குறையும்.
  • சமையல் சோடா அல்லது வினிகரை நீரில் பேஸ்ட் போல செய்து அதை வண்டு கடித்த இடத்தில் தடவினால் அதன் வலி குறையும்.
  • தேனீ அல்லது வண்டு கடித்த இடத்தில் உருளைக் கிழங்கை வைத்து தேய்க்கலாம் அல்லது வெங்காயத்தையும் கடித்த இடத்தில் தடவலாம்.
  • பூண்டின் சாறு எடுத்து அதை வண்டு கடித்த வலி உள்ள இடத்தில் பகுதியில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவ, வலி மற்றும் வீக்கம் குறையும்.
  • பப்பாளி பழத்தின் சதைப்பகுதியை வண்டு கடித்த இடத்தில் தடவினால் அதன் கடுகடுப்பு குறையும்.
  • தேனீ கடித்த இடத்தில் தேன் தடவினால் அதன் தேன் கடியின் வீரியம் குறைவதோடு வலியும் குறையும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்