ஆண்மை குறைவுக்கு உடனடி பலன் தரும் இலை: உறங்கும் முன் சாப்பிடுங்கள்

Report Print Printha in மருத்துவம்

ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

இது தாமரையை போன்று நீரில் வளராமல், நிலத்தில் வளரக்கூடிய ஒரு செடி வகையாகும். இதன் பூ சிவந்த நிறமும் நடுவில் நாமம் போன்றும் காணப்படும்.

ஆண்மை குறைபாட்டை போக்குவது எப்படி?

ஆண்மை குறைபாடு மற்றும் குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, வேர், பூ, காய் ஆகிய அனைத்தையும் நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவு உறங்கும் முன் பாலில் கலந்து சாப்பிட்டு வர உடனடி பலன் கிடைக்கும்.

ஓரிதழ் தாமரையின் வேர் முதல் பூ வரை அனைத்தையும் அரைத்து அதில் சிறிதளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் 3 நாட்கள் சாப்பிட்டு வர ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்கு, அடி வயிறு வலி போன்றவை சரியாகும்.

அதுவே அவற்றை ஆட்டுப்பாலில் கலந்து 21 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

ஓரிதழ் தாமரையின் மருத்துவ பயன்கள்
  • ஓரிதழ் தாமரையின் இலை தூக்கமின்மை பிரச்சனையை போக்கும் மருந்தாக பயன்படுகிறது.
  • ஓரிதழ்தாமரையின் இலையை அதிகாலையில் மென்று சாப்பிட்டு, பால் குடித்து வர உடல் ஆரோக்கியம் மேம்படும்.

  • ஓரிதழ் தாமரையின் இலை முதல் வேர் வரை அனைத்தையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் விஷக் காய்ச்சல் பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

  • ஓரிதழ் தாமரையின் கஷாயத்தை ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிட்டால் நல்ல பலனை பெறலாம்.

  • ஓரிதழ் தாமரையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து சிறு உருண்டையாக்கி தினமும் அதிகாலை சாப்பிட்டு வந்தாலும் முதுமை தோற்றம் மறையும்.

  • பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்ப் பகுதிகளில் வரக்கூடிய மேகவெட்டை நோய்க்கு ஓரிதழ் தாமரை இலையுடன் பச்சைக் கற்பூரம், கோரோஜனை ஆகிய இரண்டையும் அரைத்து அதனுடன் பசு நெய் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...