வெறும் 72 மணிநேரத்தில் நுரையீரலை சுத்தப்படுத்தலாம்!

Report Print Kabilan in மருத்துவம்
1151Shares
1151Shares
ibctamil.com

நமது உடலின் மிகவும் முக்கியமான உறுப்பு நுரையீரல், இன்றைய சூழலில் காற்றில் உள்ள மாசுக்களால் நமது நுரையீரல் பல நச்சுக்களை உள்வாங்கி வருகிறது. அவற்றை வெளியேற்றி, நுரையீரலை சுத்திகரிக்க சில வழிகளை இங்கே காணலாம்.

மிகவும் இலகுவான உறுப்பான நுரையீரலை பலர் சிகரெட் புகைப்பதன் மூலமாக பலவித நச்சுக்களை அதனுள் சேர அனுமதிக்கின்றனர். எனவே, புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதே முதலில் நுரையீரலை பாதுகாக்கும் வழிமுறையாகும். மாசு நிறைந்த சூழலில் வசிப்பவராக இருந்தால் முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.

இஞ்சியானது, சுவாச பாதை மற்றும் நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும் அருமருந்தாகும். இதனை கிரீன் டீயுடன் சேர்த்து பருக, வியர்வையின் மூலமாக உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். தூங்குவதற்கு முன்பு, கிரீன் டீ பருகி வர நல்ல பயனை அளிக்கும்.

புதினா இலைகளை மூன்று அல்லது ஐந்து எடுத்து தினமும் மென்று வர, நுரையீரலில் உள்ள தீய பாக்டீரியாக்களை அது வெளியேற்றிவிடும்.

மேலும், 20 நிமிட வெந்நீர் குளியல் மற்றும் தினமும் அரைமணி நேர யோகா பயிற்சியின் மூலமாகவும் நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றலாம்.

72 மணிநேரத்தில் நுரையீரலை சுத்தப்படுத்துவது எப்படி?
  • இதற்கு முதலில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது அவசியம்.

  • முதல் நாள் இரவு படுக்கைக்கு முன்பாக ஹெர்பல் டீயை அருந்த வேண்டும், இது உடலிலுள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது.
  • காலை உணவுக்கு முன்பாக 300 மிலி தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தவும்.
  • காலை மற்றும் மதிய உணவுக்கு இடையே 300 மிலி கேரட் சாறை அருந்தவும்.

  • மதிய உணவின் போது பொட்டாசியம் அதிகம் கொண்ட சாற்றை 400 மிலி அருந்தவும்.
  • இரவு நேர படுக்கைக்கு முன்பாக 400 மிலி Cranberry சாற்றை அருந்தவும், இது நுரையீரல் தொற்று மற்றும் பக்டீரியாவை நீக்க உதவுகிறது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்