காலில் சேற்றுப்புண் அரிப்பா? உடனே இதை செய்திடுங்கள்

Report Print Printha in மருத்துவம்
355Shares
355Shares
lankasrimarket.com

மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு, சகதி, கழிவு நீர் கலந்த மழைநீரை ஆகியவற்றில் பாதங்கள் நனையக் கூடும்.

அதனால் கால்களின் இரண்டு விரல்களுக்கு நடுவே அரிப்பு மற்றும் புண்கள் ஏற்படும். இதனை குணமாக்க சில வழிகள் இதோ,

சேற்றுப் புண்ணை தடுப்பது எப்படி?

  • வெந்நீரில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து கால்களை கழுவ வேண்டும்.

  • வீட்டில் அரிசி கழுவும் நீரை நன்றாக கொதிக்க வைத்து அந்த நீரினால் பாதங்களை நன்கு கழுவி ஈரப்பதம் இல்லாமல் துடைக்க வேண்டும்.

  • ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையுடன் நீர் சேர்த்து, கொதிக்க வைத்து அந்த நீரினால் பாதங்களை நன்கு கழுவலாம்.

  • குழந்தைகளுக்கு காலில் சேற்றுப்புண் வந்தால் சிறிதளவு வெண்ணெயைத் தடவினாலே போதும் குணமாகிவிடும்.

  • தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் சேர்த்து, குளிப்பதற்கு முன், காலில் தடவிக் குளித்து வந்தால், சேற்றுப்புண் வராது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்