உணவுக்கு முன்னர் தேங்காய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புதம்

Report Print Kabilan in மருத்துவம்

நமது அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஆரோக்கியம் குறித்த பிரச்சனைகளுக்கு இயற்கையான உணவுகளின் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும்.

வாய்ப்புண் உள்ளவர்கள் தேங்காய்த் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் விரைவாக வாய்ப்புண் ஆறிவிடும்.

ரத்தம் குறைவாக இருப்பது பல பேருக்கு உள்ள பிரச்சனையாகும். அவர்கள், கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கசாயம் வைத்து குடித்து வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் என்பது ஒரு முக்கிய பிரச்சனையாகும். அதற்கு, கருஞ்சீரகத்துடன், பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

ரத்த சோகை உள்ளவர்கள், கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் பத்து கிராம் என்ற அளவிற்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறவர்கள், வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்.

ரத்த குழாயில் கொழுப்பு அதிகப்படியாக சேர விடாமல் தடுக்க, தினமும் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக, அரை தேக்கரண்டி அளவு ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட வேண்டும். இதனால் ஆயுளும் அதிகரிக்கும்.

சீதபேதியை குணப்படுத்த ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட வேண்டும். மேலும், தயிர், மோர் மற்றும் இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வதும் நன்மை பயக்கும்.

உடல் வலியை போக்க, சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமப் பொடியை கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு, மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.

துளசி, மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக் கூடியது. எனவே, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்த நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

தொண்டையில் வலி, புண் ஏற்பட்டால், கொஞ்சம் சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு குணமடையும்.

அஜீரணக் கோளாறுக்கு, கொய்யாவின் கொழுந்து இலையை சாப்பிட்டால் நல்ல பலன் தரும்.

பித்தம் தீர, கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை இரண்டு வேளையும் அருந்த வேண்டும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்