உணவுக்கு முன் தேங்காய்: என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Printha in மருத்துவம்
481Shares

நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு உபாதைகளுக்கும் இயற்கையில் பல தீர்வுகள் உள்ளது. அதில் சில பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகள் இதோ,

நன்மைகள்

 • வாயில் புண் உள்ளவர்கள் தேங்காய்த் துண்டுகளை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் விரைவில் ஆறும்.

 • ரத்தம் குறைவாக உள்ளவர்கள் கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் ஆகியவை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

 • மாதவிலக்கு பிரச்சனை உள்ளவர்கள் கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சனை விரைவில் குணமாகும்.

 • கீழாநெல்லி, கரிசாலை ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

 • வெண்டைக்காய் விதைகளை பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி 3 நாள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் சரியாகும்.

 • கொழுப்பு உணவு சாப்பிடுவதற்கும் 30 நிமிடத்திற்கு முன் தினசரி 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாது.

 • ஜாதிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி நெய் விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். அதோடு சீதபேதி உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம்.

 • உடம்பு வலி உள்ளவர்கள் நீரில் ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் கலந்து வடிகட்டி கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்க்க வேண்டும்.

 • துளசி இலைகளை ஒரு டம்ளரில் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளையின் வலிமை அதிகரிக்கும்.

 • தொண்டையில் புண், வலி உள்ளவர்கள் மிளகை தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் குணமாகும்.

 • அஜீரணம் மற்றும் மந்தம் பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாவின் கொழுந்து இலைகளை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

 • கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளைகள் குடித்து வந்தால் சரியாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்