பயனுள்ள பாட்டி மருத்துவம்.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

Report Print Printha in மருத்துவம்

சளி தொல்லை, இருமல் போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளை எளிதில் குணமாக்க அருமையான பாட்டி வைத்தியம் இதோ!

  • வெந்தயத்தை தேங்காய்ப்பாலில் ஊறவைத்து, அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு குறையும்.
  • முருங்கைப் பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல், வாயில் நீர் ஊறல், வாய்க் கசப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
  • சிறிதளவு துளசி இலையை எடுத்து அதை இடித்து சாறு எடுத்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் இருமல் பிரச்சனை உடனடியாக குணமாகும்.
  • சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால், இருமல் பிரச்சனை உடனடியாக நிற்கும்.
  • தென்னைமரக் குருத்தோலையை நெருப்பில் விட்டு தூள் செய்து, அதை தேங்காய் எண்ணெயில் குழப்பி காலில் செருப்பு கடிபட்ட இடத்தில் தடவி வந்தால், காயம் குணமாகும்.
  • காய்ந்த திராட்சை பழத்தை பசும்பாலில் ஊற வைத்து பிழிந்து அந்த சாறை வாடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்து வர மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படாது.
  • திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு, மிளகு, வேப்பங்கொழுந்து, ஆகியவற்றை சேர்த்து அரைத்து நிழலில் காய வைத்து சாப்பிட்டால், ஜலதோஷம் குணமாகும்.
  • காய்ந்த மஞ்சளை பொடியை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால், கண் எரிச்சல் குணமாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments