இந்த தோல் பிரச்சனை உங்களுக்கு இருக்கா? தீர்வு இதோ

Report Print Raju Raju in மருத்துவம்

மனிதனின் தோல் மென்மையானதாகும், இதில் திடீரென்று பலருக்கு மரு எனப்படும் தோல் மச்சம் போல ஒன்று தோன்றும். இது பலருக்கு கழுத்து பகுதியில் தான் அதிகம் இருக்கும்.

இதை எளிதான ஒரு மருத்துவத்தை செய்வதன் மூலம் நாமே அகற்ற முடியும்!

தேவையான பொருட்கள்
  • பஞ்சு உருண்டை
  • ஆப்பிள் சாறு வினீகர் (vinegar)
செய்முறை
  • முதலில் மரு இருக்கும் இடத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.
  • பின்னர் மென்மையான துணியை வைத்து அந்த இடத்தை துடைக்க வேண்டும்.
  • இப்போது வினீகரில் பஞ்சை நன்றாக ஊற வைத்து அந்த பஞ்சை மரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இப்படி தினமும் 2லிருந்து 3 முறை செய்யலாம்.
  • வினீகரில் ஆசிடிட்டி தன்மை உள்ளதால் சிறிது எரிச்சல் ஏற்படலாம். இப்படியான சமயத்தில் வினீகரில் சில சொட்டு தண்ணீர் கலந்து கொண்டால் அதன் வீரியம் குறையும்.
  • இப்படி செய்து வந்தால் ஒரு வாரத்தில் மருவின் நிறம் மாறி அது தோலிலிருந்து தானாகவே உதிர்ந்து விடும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments