உயிர் போகும் பல் வலியால் அவஸ்தையா? இதை மட்டும் செய்திடுங்க

Report Print Raju Raju in மருத்துவம்
3280Shares

பல் வலி யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். பல் சொத்தை, ஈறு வீக்கம், கிருமி தொற்று போன்ற பல்வேறு விடயங்களால் பல் வலி ஏற்படுகின்றது.

இந்த பல் வலியை வீட்டு மருத்துவம் மூலமே சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது தெரியுமா?

முதலில் கிராம்பை பொடியாக்கி அரைத்து கொள்ள வேண்டும். அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் தேங்காய் எண்ணெய் கலக்க வேண்டும்.

பின்னர் அரை ஸ்பூன் அளவு உப்பு மற்றும் பெப்பரை (மிளகு) கலக்க வேண்டும். இதனுடன் கடைசியாக சில சொட்டு தண்ணீரை கலக்கினால் பல்வலிக்கான மருந்து தயார்!

தயாரான மருந்தை டூத் பிரஷ்ஷில் போட்டு எந்த பற்களில் வலிக்கிறதோ அங்கு வைத்து தேய்க்க வேண்டும்.

இப்படி செய்தால் சிறிது நேரத்தில் வலி குறைவதை உணரலாம். பல்வலி சமயத்தில் இப்படி ஒரு நாளைக்கு மூன்று வேளை வரை செய்யலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments