பரம்பரையலகில் சேமிக்கப்படும் இதயத் தாக்கிற்கான தகவல் - ஆய்வில் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in மருத்துவம்

இதயத் தாக்கிற்கான செய்தியானது பரம்பரையலகுகளில் சேமிக்கப்படுவதையும், DNA இல் உண்டாகும் இரசாயன மாற்றங்கள் குறித்த பரம்பரையலகை செயற்பாட்டு நிலைக்கு கொண்டுவருவதையும் ஆய்வொன்று வெளிக்கொணர்ந்துள்ளது.

உலகளவில் மரணத்தை தோற்றுவிக்கக் கூடிய இதய நோய்களானது பாரம்பியத்தினாலும், சூழல் காரணிகளாலும் உண்டாகிறது.

இதய நோயானது குருதிக்குழாய்களில் உண்டாகும் நோய்த் தாக்கம், இதயத் தாக்கு, ஆன்ஜினா, பிறவி நோய்கள் போன்ற பல நோய்களை உள்ளடக்கியது.

மேற்படி ஆய்வில், இதயத் தாக்கிற்கு ஆளான நோயாளர்களில் பரம்பரையலகு சம்பந்தப்படாத மாற்றங்களால் உண்டாகும் நோய் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது.

இதன் போதே, இதயத் தாக்கு ஏற்படும் வேளைகளில் உடல் சமிக்ஞைகள் குறித்த வகை பரம்பரையலகளை செயற்படுத்துகின்றமை அவதானிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பொறிமுறையானது உடல் இழையங்களை கடுமையான அவத்தையிலிருந்து பாதுகாத்து, இதயத்தகக்கிற்கு பின்னர் உடலை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டுவருவதாக தெருவிக்கப்படுகிறது.

அத்துடன் இதயத்தாக்கின் போது நோயாளர்களில் பல பரம்பரையலகுகளுக்கு வெளியான மாற்றங்கள் உண்டாவதும் தெரியவந்துள்ளது. இப் பரிசோதனைகள் குருதி மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Human Molecular Genetics எனும் ஆய்வுப் பத்திரிகையில் இம் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments