எத்தனை பலன்கள் கொய்யா பழத்தில்!

Report Print Deepthi Deepthi in மருத்துவம்
எத்தனை பலன்கள் கொய்யா பழத்தில்!
989Shares

கொய்யாபழம் குறைந்த விலையில் கிடைப்பதால் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது. குறைந்த விலையில் கிடைப்பதால் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள், இதில் மிகுந்த நார்ச்சத்துகள் உள்ளன.

  • நார்ச்சத்துகள் அதிகமாக இருப்பதால் இது குடலை சுத்தப்படுத்தி நச்சுகள் சேர்வதை தடுக்கிறது. மேலும், குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது.
  • நல்ல மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
  • 100கி கொய்யாவில் 225மி.கி வைட்டமின் சி உள்ளது. இது ஒரு மனிதனுக்கு ஒரு நாள் தேவைப்படும் அளவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்
  • இதனால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய் தொற்று, சில வகையான புற்றுநோய் தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
  • மேலும், ரத்தக்குழாய்கள், எலும்பு, தோல் போன்ற உறுப்புகளின் கட்டமைப்பு புரதமான கொலஜன் சேர்க்கைக்கு அவசியமாகவும் உள்ளது.
  • வைட்டமின் ஏ வும் இதில் அதிகமாக இருப்பதால் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.
  • வாழைப்பழத்தைப் போலவே இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் நீர்ச்சத்துப் பராமரிப்புக்கும், இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க பெரிதும் பயன்படுகிறது.
  • மேலும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் கொய்யாபழம் மிகவும் பாதுகாப்பான உணவு.
  • சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதய பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கொய்யாபழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments