காபி குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

Report Print Basu in மருத்துவம்
காபி குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்
584Shares

காபி குடிப்பது தொடர்பாக முன்னர் விடுத்திருந்த சுகாதார ஆபத்து எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் மாற்றியமைத்திருக்கிறது.

உலக சுகாதார அமைப்பு ஆராய்ச்சியின்படி காப்பியில் புற்று நோய்க்கான ‘கார்சினோஜென்’ என்றழைக்கப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

ஆனால், அதற்கான உறுதியான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அறிவித்துள்ளார்கள்.

அதே நேரத்தில், 65 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான சூடு உள்ள பானங்களை அருந்தும்போது, அது நோயை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள். உணவுக்குழாயில் உண்டாகும் புற்றுநோய் அடிப்படையில் இவ்வாறு கூறப்படுகிறது.

தேசிய புற்றுநோய் ஆராய்ச்சிக்கான ஏஜென்சி வெளியிட்ட ஆய்வில் அதிக வெப்பம் அல்லது சூடான பானங்கள் புற்று நோயை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தொற்று நோய் மருத்துவர் ஓவன் யாங், காபியில்ப புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இல்லை என்று கூறினார். ஆனால், மிக சூடான பானம் அருந்துவதால் இது ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது என்றும் கூறினார்.

டானா லூமிஸ், ஐ.ஏ.ஆர்.சி திட்டத்தின் துணைத் தலைவர், சில நாடுகளில் ஆய்வு நடத்தியதில் மிக சூடான பானம்பருகியதால் உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்படுவதாக கூறியிருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments