மாயமான மலேசிய விமானம்... விமானியின் புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் மர்மம்: வெளியான புதிய தகவல்

Report Print Arbin Arbin in மலேசியா

மாயமான மலேசிய விமானத்தின் விமானி தாம் கடைசியாக செல்லவிருக்கும் பகுதி தொடர்பில் புகைப்படம் ஒன்றில் தெரிவித்திருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மாயமான மலேசிய விமானத்தில் இருந்து கடைசியாக அந்த விமானி வெளியிட்ட புகைப்படமானது, தாம் செல்லும் பகுதியை குறிப்பிடுவதாக தற்போது எகிப்திய பொறியாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இது ஒரு திட்டமிட்ட செயல் எனவும் அந்த எகிப்திய பொறியாளர் குறிப்பிட்டுள்ளார். மலேசிய விமானம் MH370 மாயமான நிலையில், குறித்த விமானமானது பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கடத்தப்பட்டத்காகவும் முதன் முறையாக வாதிட்டவர் இந்த எகிப்திய பொறியாளரே.

இதற்கு முக்கிய காரணமாக இவர் குறிப்பிடுவது, பிலிப்பைன்ஸ் சுற்றுவட்டாரத்தில் உள்ள 7,000 தீவுகளில் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட தற்போது பயன்பாட்டில் இல்லாத விமானத்தளங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மலேசிய விமானத்தை கடத்திய நபர் அல்லது கடத்தியவர்கள் இங்கு தரையிறக்கி இருக்கலாலாம் எனவும்,

இங்குள்ள ஓடுதளங்கள் குறுகியது என்பதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் பாய்ந்திருக்கலாம் என இஸ்மாயில் என்ற அந்த எகிப்திய பொறியாளர் தெரிவித்திருந்தார்.

(Image: Supplied)

2014 ஆம் ஆண்டு அந்த விமானம் மாயமானதற்கு முன்னர் குறித்த விமானி வெளியிட்ட குடும்ப புகைப்படத்தில் மர்மம் புதைந்திருப்பதாக கூறும் இஸ்மாயில்.

அந்த புகைப்படத்தில் குறித்த விமானியின் குடும்பம் அமர்ந்திருக்கும் நாற்காலியானது நீல நிற துணியால் மூடப்பட்டுள்ளது.

இது பிலிப்பைன்ஸ் பகுதியில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகும். குறித்த புகைப்படத்தில் தாம் எங்கு செல்ல இருப்பதாக அவர் முன்னரே குறிப்பிட்டுள்ளதாகவும்,

பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள தீவுக் கூட்டத்தில் ஒன்றில் தம்மை தேடினால் போதும் என அவர் அப்போதே குறிப்பிட்டு சென்றுள்ளார் என இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்