வெளிநாட்டு பெண்ணை காதலித்த தமிழக இளைஞன்: நேரில் பார்த்த பின்? திடுக்கிடும் பின்னணி

Report Print Santhan in மலேசியா

தமிழகத்தில் வெளிநாட்டு பெண்ணை காதலித்த இளைஞன், அவரை நேரில் கண்டவுடன் பார்க்க பருமனாக இருந்ததால் அவரை திருமணம் செய்ய மறுத்த நிலையில், இளைஞனை அப்பெண் கூலிப்படை வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நேரு. இவருக்கு அசோக்குமார் என்ற 28 வயது மகன் உள்ளார்.

ஐ.டியில் வேலை பார்த்து வரும் இவருக்கு முகநூல் பக்கம் வழியாக மலேசியாவை சேர்ந்த அமுதேஸ்வரி என்ற பெண்ணின் பழக்கம் கிடைத்துள்ளது.

இதனால் பேஸ்புக்கில் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதன் பின் இது காதலாக மாறியுள்ளது. இதனால் அசோக்குமாரை சந்திப்பதற்காக அமுதேஸ்வரி மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளார்.

இதுநாள் வரை அமுதேஸ்வரியை பேஸ்புக்கில் மட்டுமே பார்த்து வந்த அசோக்குமார், அவரை நேரில் முதல் முறையாக பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஏனெனில் பேஸ்புக்கில் பார்த்த அமுதேஸ்வரிக்கும், நேரில் பார்த்த போதும் நிறைய வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் அசோக், நீ குண்டாக இருக்கிறாய். அழகாக இல்லை என்று கூறியுள்ளார்.

அதன் பின் அமுதேஸ்வரி மலேசியாவிற்கு சென்றுள்ளார். இருப்பினும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட அசோக்குமார் அமுதேஸ்வரியின் தொடர்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து அசோக்கை தொடர்பு கொண்ட பெண், ஒருவர் நான் அமுதேஸ்வரியின் அக்கா, அவள் தற்கொலை செய்து கொண்டாள், அதற்கு நீ தான் காரணம் என்று கூற, அதிர்ச்சியடைந்த அசோக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

உடனே பேசிய அந்த பெண், நான் நேரில் வருகிறேன், நீ அப்போது மன்னிப்பு கேள் என்று கூற, உடனே அசோக்கும் சம்மதித்துள்ளார். அந்த பெண்ணும் தமிழகத்திற்கு வரவே, அசோக் நேரில் சென்று பார்த்த போது, அது அமுதேஸ்வரி என்பதை கண்டுள்ளார்.

அமுதேஸ்வரி உடனே உன்னை சந்திக்கவே இப்படி செய்தேன், என்னை ஏன் ஏமாற்றினாய்? என்னை திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் அசோக் தொடர்ந்து மறுத்ததால், பொலிசில் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் சமாதானம் பேசி இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில் அவர் தன்னுடைய பெயர் அமுதேஸ்வரி இல்லை விக்னேஷ்வரி என்று கூறியுள்ளார். அதன் பின் இவன் மீது வழக்கு பதிவு செய்தால் தான் இங்கிருந்து செல்வேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் வழக்கு பதிவு செய்த பின் அவர் மலேசியா திரும்பியுள்ளார்.

இதற்கிடையில், இன்று போடி நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சிலர் சுற்றித் திரிந்துள்ளனர், பொலிசார் அவர்களை பிடித்து விசாரித்த போது, அசோக்குமார் என்பவரை கொலை செய்வதற்காக மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் பணம் கொடுத்ததாக கூறியுள்ளார்.

பொலிசார் உடனடியாக அவர்களை கைது செய்தனர். பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இதற்காக ஒரு பெண் மலேசியாவில் இருந்து வந்திருக்கிறார் என்றால் அவர் நிச்சயமாக அசோக்குமாரை விடமாட்டார் என்ற கோணத்தில் அவரை கவனித்து வந்தோம்,

அதன் விளைவாகத் தான் கூலிப்படையினரை பிடிக்க முடிந்தது. ஒரு அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்