வெளிநாட்டில் தூங்கி கொண்டிருந்த கணவனை கொடூரமாக வெட்டிய இலங்கை பெண்! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

Report Print Raju Raju in மலேசியா

மலேசியாவில் கணவரின் மர்ம உறுப்பு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் வெட்டிய இலங்கை பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் வியாழக்கிழமை காலை Meru நகரில் உள்ள வீட்டில் நடந்துள்ளது.

அதன்படி இலங்கையை சேர்ந்த 40 வயதான ஆண் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அவரின் 48 வயதான இலங்கையை சேர்ந்த மனைவி, கத்தியை வைத்து கணவரின் மர்ம உறுப்பு மற்றும் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதையடுத்து Raja Permaisuri Bainun மருத்துவமனைவியில் சேர்க்கப்பட்ட கணவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிகின்றன.

பொலிசார் கூறுகையில், பொறாமையின் காரணமாக தம்பதி இடையில் ஏற்பட்ட தவறான புரிதலால் இந்த சம்பவம் நடத்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர் ஆபத்தான நிலையில் இல்லை என கூறப்பட்டுள்ளது.

அவரை கத்தியால் குத்திய மனைவியை பொலிசார் தேடி வரும் நிலையில், தம்பதியிடம் அங்கு வசிப்பதற்கான சரியான ஆவணங்கள் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...