போலி விசாவில் வெளிநாடு சென்ற இளைஞர்.... கையில் 6 விரல்களை இழந்து தவிப்பு: நடுக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in மலேசியா

இந்தியாவில் இருந்து போலி விசாவில் பிழைப்புக்காக மலேசியா சென்ற இளைஞருக்கு கைகளில் ஆறு விரலும் துண்டானதால் தற்போது இக்கட்டான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து விசா முகவர்களால் ஏமாற்றப்பட்டு போலி விசாவில் மலேசியாவுக்கு பிழைப்புக்காக சென்றுள்ளார் 28 வயதான இளைஞர்.

உரிய வேலை ஏதும் அமையாமல் பட்டினியில் சிக்கி, இறுதியில் வேறு வழி இன்றி தொழிற்சாலை ஒன்றில் வேலையில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 5 வாரங்களுக்கு முன்பு, தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி அவரது 6 விரல்களும் துண்டாகியுள்ளது.

முறைப்படி விசா இல்லை என்பதால் அவரை அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் ஒரு தனியார் மருத்துவமனைக்கு இட்டுச் சென்று, விரலில் காயங்கள் ஆறும் வரையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

அந்த இளைஞர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது மட்டுமல்ல, அந்த இளைஞரின் தந்தைக்கு இருதய நோய் இருப்பதாகவும்,

தற்போது விரல்கள் துண்டிக்கப்பட்டு எதிர்காலமே இருண்டு போயிருக்கும் இளைஞர் தொடர்பில் தகவல் தெரிவித்தால், அது மேலதிக இழப்பையை ஏற்படுத்தும் என்பதால் அந்த இளைஞரின் குடும்பத்தாருக்கு இந்த தகவலை தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் தற்போது, அவர் பணியாற்றிய அந்த தொழிற்சாலை அவரை கைவிட்டதுடன், மலேசியாவுக்கு அழைத்து வந்த முகவரும் சந்திக்க மறுத்துள்ளார்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவருக்கு இந்த தகவல் தெரியவர, அவர் அந்த இளைஞரை நேரிடையாக சந்தித்துள்ளார்.

பின்னர், அந்த சமூக ஆர்வலர் பணியாற்றும் நிறுவனத்தில் பேசி, தமக்கு தெரிந்தவர்கள் அனைவரிடம் இருந்தும் சேகரித்த சுமாரான தொகை ஒன்றை வாங்கி அந்த இளைஞருக்கு அளித்து, அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மலேசியாவை பொறுத்த மட்டில், அங்குள்ள உள்ளூர் மக்களால் செய்ய முடியாத வேலைகளை மட்டுமே வெளிநாட்டு மக்களுக்கு அங்குள்ள அரசாங்கம் வழங்கி வருகிறது.

ஆனால் கல்லூரி ஆசிரியர்கள், கணினி பொறியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு மட்டுமே அரசாங்கம் வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் போலி முகவர்களை நம்பி சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் வரை விசா கட்டணமாக செலுத்தி பல இளைஞர்கள் மலேசியாவில் சென்று திண்டாடி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்