அரசரை திருமணம் செய்த 6 மாதத்தில் குழந்தை பெற்ற மொடல் அழகி: விவாகரத்து செய்த அரசர்

Report Print Vijay Amburore in மலேசியா

ரஷ்ய மொடல் அழகியை திருமணம் செய்த முன்னாள் மலேசிய அரசர், குழந்தை பிறந்த சில வாரங்களில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

மலேசியாவின் 15ஆவது அரசர் ஐந்தாம் சுல்தான் முகமது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ம் திகதியன்று ரஷ்யாவின் முன்னாள் மொடல் அழகி ஓக்சானா வியோவொடினாவை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் இந்த நிகழ்வு ரகசியமாக நடந்ததால், வெளிஉலகிற்கு தெரியாமல் இருந்தது. அதன்பிறகு நவம்பர் 22 ஆம் திகதி மீண்டும் இரண்டாவது முறையாக அனைவருக்கும் தெரியும்படி ரஷ்யாவில் திருமணம் நடைபெற்றது.

ஓக்சானா கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவர் ஒரு இளைஞருடன் நெருக்கமாக முத்தம் கொடுத்தபடி இருக்கும் வீடியோ காட்சிகள் ரஷ்ய ஊடகங்களில் வைரலாக பரவியது.

இதனை பார்த்த மலேசியாவின் முன்னாள் மன்னர் கடும் கோபமடைந்து, விவாகரத்து செய்ய முடிவு செய்தார். அதே சமயம் அரச மரபை மீறியதாக நினைத்து தன்னுடைய அரச பதவியையும் துறந்தார்.

அதன்பிறகு மே மாதம் 21ம் திகதியன்று தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் தனித்தனியாக பிரித்திருத்த சமயத்தில் ஓக்சானா, தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அந்த பதிவு பலருக்கும் புரியாத வகையிலும், கணவரை கடுமையாக விமர்சிப்பதை போலவும் இருந்தது.

இந்த பதிவின் எதிரொலியாக தற்போது மலேசியாவின் முன்னாள் அரசர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து அரண்மனை நிர்வாகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட, இந்த நகல் ஓக்சானாவிற்கு வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்