முஸ்லீம் மதத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

Report Print Deepthi Deepthi in மலேசியா
220Shares

மலேசியாவில் முஸ்லீம் மதம் குறித்து இழிவாக பேசிய நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் Mohamad Fuzi Harun தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் சமூகவலைதளங்களில் மதங்களை இழிவுபடுத்தி கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

22 வயதான Ayea Yea என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், முஸ்லீம் மதம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியும் கருத்துக்கள் பதிவிட்டுள்ளார்.

பிரிவு 298A மற்றும் பிரிவு 505 (c) பிரிவு மற்றும் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 ன் கீழ் இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் மட்டுமின்றி இன்னும் நான்கு நபர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் மதம் ரீதியாக அல்லது இன உணர்ச்சிகளைத் தூண்டி எறிந்து எந்தவொரு கருத்தையும் பதிவேற்றுவதன் மூலம் அல்லது பகிர்வதன் மூலம் மக்கள் பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

எனவே, அவர்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்