239 பேரை பலிவாங்கிய மலேசிய விமானத்தின் கடைசி 12 நிமிடங்கள்: அம்பலமான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in மலேசியா

உலகை உலுக்கிய mh370 மலேசிய விமான விபத்து தொடர்பில் தற்போது பகீர் கிளப்பும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த விமானமானது தீ விபத்தில் சிக்கியே பேரிழப்பை சந்தித்ததாக பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாத 8 ஆம் திகதி கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான ஊழியர்கள் உள்ளிட்ட 239 பெருடன் சீனாவின் பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணமான குறித்த விமானமானது மாயமானது.

இதில் பயணம் மேற்கொண்ட அனைவரும் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஊடகவியலாளரான Ean Higgins தமது புதிய நூல் ஒன்றில், குறித்த விமானமானது எவ்வாறு விபத்தில் சிக்கியது என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ளார்.

அதில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில், விமானியின் பக்கவாட்டில் இருந்த windshield heater தீப்பற்றியதாகவும்,

இது விமானத்தில் உள்ள மின் இணைப்புகளை சேதப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த விமானமானது ரடாரில் இருந்தும் மாயமானது.

இதனிடையே 53 வயதான Zaharie Ahmad Shah என்ற விமானி உடனடியாக தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்.

மட்டுமின்றி தீயை கட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் அவசர அழைப்பு விடுக்கவும் காத்திருந்துள்ளனர்.

ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் விமானிகள் இருவரும் திணறியுள்ளனர். ஆனால் தீ விபத்து ஏற்பட்ட 12 நிமிடங்களில் 239 பேருடன் அந்த விமானம் விபத்துக்குள்ளானது என ஊடகவியலாளர் Ean Higgins குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்