எஜமானார் குடும்பத்தை காப்பாற்ற 20 அடி நீள மலைப்பாம்புடன் போராடிய நாய்: இறுதியில் நடந்தது என்ன?

Report Print Raju Raju in மலேசியா

மலேசியாவில் மலைப்பாம்பிடம் தனது உயிரை பறிகொடுத்து தனது எஜமானரின் குடும்பத்தினரை காப்பாற்றிய நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jalan Kejatau பகுதியில் உள்ள வீட்டில் வாழும் குடும்பத்தார் நாய் ஒன்றை வளர்த்து வந்தனர்.

இன்று காலை குடும்பத்தார் தங்களை நாய் எங்கே என தேடியபோது அது காணாமல் போயுள்ளது.

அப்போது வீட்டின் முற்றத்துக்கு வந்தபோது நாய் மூச்சற்ற நிலையில் படுத்திருந்த நிலையில் அருகில் பெரிய மலைப்பாம்பு படுத்திருந்ததை பார்த்து குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் பாம்பை அவர்கள் தாக்க தொடங்கிய நிலையில் பாம்பானது அங்கிருந்த பெரிய ஓட்டைக்குள் புகுந்தது.

பின்னர் நாயை பரிசோதனை செய்தபோது அது ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

தன்னுடைய எஜமானரின் வீட்டுக்குள் நுழைய முயன்ற மலைப்பாம்பை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் நாய் தனது உயிரை விட்டது.

இதையடுத்து குடும்பத்தார் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஊழியர்கள் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு பாம்பை மீட்டனர்.

பாம்பானது 20 அடி நீளத்தில் இருந்தது என அவர்கள் கூறினார்கள். தங்கள் நாயை பறிகொடுத்த குடுமபத்தார் கூறுகையில், எங்கள் நாயின் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாயானது பாம்புடன் போராடாமல் இருந்திருந்தால் எங்கள் வீட்டிற்குள் அது வந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்