ஆசிரியரை காதலித்து மணந்த 20 வயது மாணவி: வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in மலேசியா

மலேசிய மாணவி ஒருவர் தனக்கு ஆசிரியராக இருந்தவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சயிஸ்வனி ஹைரிசான் (20) என்ற பெண் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியில் படித்து போது அவருக்கு இயற்பியல் ஆசிரியராக இருந்தவர் முகமது பஹாரி (32).

பள்ளிப்படிப்புக்கு பின்னர் முகமது உடனான தொடர்பு சயிஸ்வனிக்கு விட்டு போனது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலம் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் முகமதும், சயிஸ்வனியும் நட்பாகியுள்ளார்.

இதையடுத்து இருவரும் நெருங்கிய நட்பான நிலையில் அது காதலாக மாறியுள்ளது.

இதன்பின்னர் முகமதும், சயிஸ்வனியும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதலை வளர்த்து கொண்டதோடு மட்டுமல்லாமல் திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து ஆசிரியர் முகமது கூறுகையில், எங்களுக்குள் 12 வயது வித்தியாசம் இருப்பதால் நாங்கள் கவலைப்படவில்லை.

எனக்கு ஏற்கனவே 6 வயதில் மகள் உள்ளார், அவரையும் தன் மகளாக பாவிக்கும் சயிஸ்வனி மிகுந்த பாசம் காட்டுகிறார் என கூறியுள்ளார்.

முகமது - சயிஸ்வனி திருமணம் செய்து கொண்டதையடுத்து முகமதின் மாணவர்கள் பலர் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்