மாயமான மலேசிய விமானம் என்னவானது: பரபரப்பு தகவலை வெளியிடும் அதிகாரிகள்

Report Print Arbin Arbin in மலேசியா

பல ஆண்டுகள் தீவிர விசாரணைக்கு பின்னர் மாயமான மலேசிய விமானம் தொடர்பில் முக்கிய அறிக்கையை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.

திங்களன்று சுமார் 1,500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட இருப்பதாக அரசு சார்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் இந்த விமானம் தொடர்பில் நடைபெற்று வந்த தேடுதல் பணி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு 6 அவுஸ்திரேலியர்கள் உள்ளிட்ட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனா தலைநகருக்கு MH370 என்ற மலேசிய விமானம் புறப்பட்டு சென்றது.

ஆனால் பாதி வழியில் குறித்த விமானமானது மாயமானது. அந்த விமானம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெறவில்லை.

இந்த நிலையில் மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் Anthony Loke வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக அதிகாரிகள் மேற்கொண்ட அனைத்து விசாரணையும், அதன் ஓவ்வொரு வார்த்தையும் வெளியிடவிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் நாள் மாயமான இந்த விமானத்தை Zaharie Shah என்ற விமானி செலுத்தியுள்ளார்.

இவரது திருமணம் முறிவுக்கு வந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் இந்திய பெருங்கடலில் தாழ்த்தியிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது.

ஆனால் அமெரிக்க நிபுணர்கள் குழு மேற்கொண்ட விசாரணையில் இந்திய பெருங்கடலில் இருந்து அவர்களுக்கு எவ்வித ஆதாரமும் சிக்கவில்லை.

பின்னர் ரஷ்ய ஏவுகணையை பயன்படுத்தி போராளிகள் குழு ஒன்று விமானத்தை தாக்கி அழித்ததாக தகவல் வெளியானது.

அதிலும் இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை. இந்த நிலையிலேயே மலேசிய அரசு இதுவரையான விசாரணை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட முன்வந்துள்ளது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்