குருவிகளைப் பிடிக்க படுவேகமாக ஊர்ந்து சென்ற பாம்பு: வைரல் வீடியோ

Report Print Raju Raju in மலேசியா

மலேசியாவில் மின்சார கம்பியில் அமர்ந்திருக்கும் குருவிகளைப் பிடிக்க பாம்பு கம்பியின் மீது வேகமாக ஊர்ந்து செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.

நாட்டின் சப்ஹா மாகாணத்தில் தான் இந்த காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

தரையில் தேடியும் இரை அகப்படாததால் பசியுடன் இருந்த பாம்பு ஒன்று மின்கம்பத்தில் அமர்ந்திருந்த குருவிகளை நோட்டமிட்ட படி வயரின் மீது ஏறியது.

கம்பி மீது வேகமாக ஊர்ந்து சென்ற பாம்பால் அதில் உட்கார்ந்திருந்த எந்த பறவையையும் பிடிக்க முடியவில்லை.

பாம்பு அருகில் சென்றதும் பறவைகள் அனைத்தும் பறந்து போயின, இது சம்மந்தமான காட்சிகளை அங்கிருந்தவர்கள் யாரோ வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட வைரலாகியுள்ளது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்