கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசியா நாட்டிற்கு சொந்தமான எம்.ஹெச்.370 விமானத்தை, அதை இயக்கிய விமானி ஜஹாரி அஹமது ஷா, சதிச்செய்து கடத்தி இருப்பதாக அந்நாட்டு அரசு முதல் முறையாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மலேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியோங் லாய் கூறியதாவது, எம்.ஹெச்.370 விமானத்தை இயக்கிய விமானி ஜஹாரி அஹமது ஷா வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிமுலேட்டர் கருவியில் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதி வழியாக விமானத்தை செலுத்துவதற்கான வழித் தடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அதே சமயம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழித் தடங்களை அந்த கருவியில் அவர் பதிவு செய்து வைத்துள்ளார்.
அதனால், விமானத்தை எந்த திசையை நோக்கி செலுத்தினார் என்பதை உறுதியாக கூற முடியாது என்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் தேசிய பொலிஸ் தலைமையான காலித் அபுபக்கர் கூறும்போது, கருப்புப் பெட்டி, பைலட் அறை குரல் பதிவு எந்திரம், தரவுப்பதிவு எந்திரம் ஆகியவை கிடைக்காமல் எதையும் சொல்ல முடியாது என்றார்.
ஆனால் பைலட் ஷாவின் தற்கொலை கொலை முயற்சி என்பதையும் அவர் கொள்கை அளவில் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.