14 வயது சிறுமியை கற்பழித்த குற்றவாளியை விடுதலை செய்த நீதிமன்றம்: காரணம் என்ன?

Report Print Peterson Peterson in மலேசியா
412Shares
412Shares
lankasrimarket.com

மலேசியா நாட்டில் 14 வயது சிறுமியை கற்பழித்த நபரே அவரை திருமணம் செய்துக்கொண்டதால் குற்றவாளியை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பலத்த எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு Sarawak மாகாணத்தில் உள்ள Kuching நகரில் அஹ்மத் யூசப் என்ற 22 வயதான நபர் வசித்து வருகிறார்.

இவர் இதே பகுதியில் வசித்த 14 வயதான சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அஹ்மத் மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 30 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்க கோரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த அஹ்மத் தான் கற்பழித்த சிறுமியை சம்மதிக்க வைத்து அவரையே திருமணம் செய்துள்ளார்.

நீதிமன்றத்தில் திருமண சான்றிதழ் ஒப்படைத்த பிறகு சிறுமியும் தான் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, இஸ்லாமிய ஷரியா சட்டப்படி கற்பழித்த சிறுமியை அஹ்மத் திருமணம் செய்துக்கொண்டதால், அவரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு பல்வேறு தரப்பினர்கள் மத்தியில் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

பெண்கள் நலச்சங்கத்தை சேர்ந்த Tan Heang Lee என்பவர் பேசியபோது, ‘கற்பழிப்பு குற்றத்தை மறைக்க அவர்களை திருமணம் செய்துக்கொள்வது இங்கு எளிதாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு கற்பழிப்பிற்கு உள்ளாகி அந்த நபரையே பெண் திருமணம் செய்துக்கொள்வது என்பது அவரது வாழ்நாள் முழுக்க அனுபவிக்கும் தண்டனையாகும்.

மேலும், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அப்பெண்களை திருமணம் செய்துக்கொள்வதை முற்றிலும் தடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

மலேசியாவில் பெண்கள் திருமணச் சட்டமானது 18 வயதாக உள்ளது. ஆனால், இஸ்லாமிய ஷரியா சட்டப்படி 16 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளையும் திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறது.

கடந்த 2010ம் ஆண்டு ஐ.நா சபை வெளியிட்ட புள்ளிவிபரத்தில் மலேசியா நாட்டில் அந்தாண்டில் மட்டும் 15 முதல் 19 வயதுடைய 82,000 பெண்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

மேலும், அதே ஆண்டு மலேசியா அரசு வெளியிட்ட தகவலில் 15 வயதிற்கு கீழ் உள்ள 16,000 சிறுமிகள் திருமணம் செய்துக்கொண்டதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments