செய்தி வாசிப்பாளரில் இருந்து தொகுப்பாளர்... நீயா நானாவில் கோபிநாத் நுழைந்த கதை

Report Print Santhan in வாழ்க்கை

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நீயா? நானா? நிகழ்ச்சியின் ஹீரோ. '

மொத்த அரங்கத்தையும் சாதுர்யமான பேச்சினால் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆளுமைத்திறனுக்கு சொந்தக்காரர் கோபிநாத்.

எந்த ஒரு கருத்தையும் ஆணித்தரமாக முன்வைத்து, சொல்லி வேண்டிய விசயத்தை, தெளிவாக சொல்லி மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் நீயா? நானா?.

நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் இன்று உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்பவர். ஆழமாகவும், ஆர்வம் குறையாமல் பிறர் கேட்கும் வகையிலும் பேசுவதில் வல்லவர்.

இன்றளவிலும் நீயா நானா நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முழு காரணமும் கோபிநாத்தின் பேச்சு என்றே கூறலாம்.

கோபிநாத் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும் ரசிகர்கள் மத்தியில் கை தட்டல்கள் தான். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பத்திரிக்கையாளர், ரிப்போர்டர், நியூஸ் வாசிப்பவர், எழுத்தாளர் என்று பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார்.

தமிழகத்தின், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிதான் கோபியின் சொந்த ஊர். பூர்விகம் தஞ்சாவூர் ஜில்லா சித்துக்காடு.

படித்தது எல்லாமே அறந்தாங்கி, திருச்சியில்தான்.ரேடியோ ஜாக்கியாகவும் வேலை பார்த்திருக்கிறார். ஆரம்பத்தில் தனக்கான இடத்தை தேர்வு செய்ய பல முயற்சிகளி மேற்கொண்டவர் கிடைத்த வேலைகளை செய்தார். பல மீடியாவில் வேலை தேடி அலைந்தார்.

ராஜ் தொலைக்காட்சியில் சில காலம் செய்தியாளராகவும் இருந்தார். அதன் பிறகு கோபிக்கு முதல் வாய்ப்பு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குற்றமும் அதன் பின்னணியும் நிகழ்ச்சி மூலம் ஒளிர தொடங்கியது.

இவரின் திறமைக்கு அடுத்ததாக தேடி வந்த வாய்ப்பு தான் நீயா நானா.அதில் கோபிக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு தான் இன்று அவரை உலகம் அறிய செய்துள்ளது.

நீயா? நானா? கோபிநாத் என்றால் தெரியாதவர்களே இல்லை.குடும்பத்தை அதிகம் நேசிக்க கூடிய கோபிநாத் முதன்முறையாக விருது நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி மற்றும் செல்ல மகளை அறிமுகப்படுத்தினார்.

தமிழ் மீது கொண்ட காதல் காரணமாகவே தனது மகளுக்கு வெண்பா என்று பெயர் சூட்டியுள்ளார்.மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்