தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்! எம்.ஜி.ஆர் முதல் ஆரியா வரை

Report Print Kavitha in வாழ்க்கை

தமிழ் திரையுலகில் பல நடிகர், நடிகைகள் ஒன்றாக நடித்ததில் இருந்து காதல் மலர்ந்து திருமணம் செய்துள்ளனர்.

அதில் காதல் ஜோடி என்றதும் பலருக்கும் நினைவில் வருவது அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா போன்றவர்கள் தான்.

இதுப்போன்று பல பிரபலங்கள் நம் தமிழ் திரையுலகில் உள்ளனர்.

அந்தவகையில் அந்த பிரபலங்கள் யார் யார் என்பதை பற்றி தற்போது அதைப் பார்ப்போம்

எம்.ஜி.ஆர் - ஜானகி
Facebook

1967 ஆம் ஆண்டு மருதநாட்டு இளவரசி, நாம், மோகினி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்த எம்.ஜி.ஆர் - ஜானகி தம்பதிகள் காதலித்து திருமணம் செய்தவர்கள்.

1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, ஜானகி அவர்கள் தனியாகத் தான் இருந்தார். பின் 1988 ஆம் ஆண்டு, மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

சரண்யா மற்றும் பொன்வண்ணன்
Google

பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த சரண்யா வில்லன் கதாப்பாரத்தில் நடித்த பொன்வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் புலிமான், பசும்பொன், கருத்தம்மா போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

ஸ்நேகா மற்றும் பிரசன்னா
fashionworldhub

ஸ்நேகா மற்றும் பிரசன்னா தம்பதிகள் பல வருடங்களாக காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள்.

இவர்கள் இருவரும் கோவா, அச்சமுண்டு அச்சமுண்டு, பிரியாணி போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா
Behindwoods

பல தென்னிந்திய மொழிகளில் நடிகையாக நடித்த பூர்ணிமா பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளருமான பாக்யராஜை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் முந்தாணை முடிச்சு, டார்லிங் டார்லிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா மற்றும் ஜோதிகா
behindwoods.

சூர்யா-ஜோதிகா 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படத்தில் தான் சந்தித்தனர். முதல் படத்திலேயே இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து 2006-இல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிகள் காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுனு ஒரு காதல், மாயாவி, பேரழகன், உயிரிலே கலந்தது போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

ராதிகா மற்றும் சரத்குமார்

Youtube

நடிகை ராதிகா, சரத்குமாரை மூன்றாவது கணவராக திருமணம் செய்துள்ளார் மற்றும் சரத்குமாருக்கு இவர் இரண்டாவது மனைவி. இவர்கள் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

கணவன் மனைவியான இவர்கள் இருவரும் நம்ம அன்னாச்சி, சென்னையில் ஒரு நாள், நானே ராஜா நானே மந்திரி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

அஜித்குமார் மற்றும் ஷாலினி
Indianexpress.com

அஜித் மற்றும் ஷாலினி பல வருடங்களாக காதலித்தனர் மற்றும் தங்கள் காதலை ரகசியமாக பல வருடங்களாக வைத்திருந்தனர்.

அமர்களம் திரைப்படத்தில் தான் காதல் மலர்ந்து இவர்கள் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

க்ரிஷ் மற்றும் சங்கீதா
galatta

க்ரிஷ் மற்றும் சங்கீதா 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

ஒரு நண்பரின் திருமணத்தில் சந்தித்த இவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடித்து, காதல் மலர ஆரம்பித்ததாம்.

ஸ்ரீகாந்த் மற்றும் வந்தனா
indiatimes

வந்தனா மற்றும் ஸ்ரீகாந்த் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நம்பியார் என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.

குஷ்பு மற்றும் சுந்தர்.சி
pinterest

நடிகை குஷ்பு, இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சுந்தர்.சி அவர்களை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நடிகை குஷ்பு சுந்தர்.சி திரைப்படங்களில் நடித்ததில் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரித்து, காதல் மலர்ந்தது.

ஆர்யா மற்றும் சாயிஷா
samayam

கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.

காதலர் தினத்தன்று தங்களின் திருமணத்தை நடிகர் ஆர்யா, சாயிஷா டுவிட்டர் மூலம் அறிவிப்பை வெளியிட்டு 2019 மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்கள் இருவரும் காப்பான், கஜினிகாந்து போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்