ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?

Report Print Abisha in வாழ்க்கை

ஆதித்தவனின் ஆட்சிமனையாகிய சிம்மராசியில் சூரியன் சஞ்சாரம் செய்யும்போது ஆவணி மாதம் என அழைக்கின்றோம். வான மண்டலத்தில் இதய பாகமாகிய சிம்ம ராசியை சர்வாதிகாரத்துடன் ஆட்சி புரியும் சூரிய பகவான், இங்கு வெகு கம்பீரமாய் பவனி வரும் சிறந்த மாதம் ஆவணி மாதமாகும்.

சூரியனைப் போலவே ஆவணி மாதத்தில் தோன்றியவர்கள் தம்முடைய இயக்கத்திற்குத் தலைவராகவே விளங்குவர். ஆத்மபலம் நிறைந் தவர். ஆக்கும் சக்தி வாய்ந்தவர்.

தோற்றம்

நடுத்தர உயரமுடையவர். ஒரு சிலர் அதிக உயரமாகவும் காண்பர். . தலை உருண்டையாகவும், பெருத்தும் காணப்படும். தாடைகள் அகண்டு விரிந்திருக்கும். உரோமம் மெல்லியதாகவும், சுருட்டை உடைய தாகவும் தென்படும். கண்கள் அகன்று இருந்த போதிலும் மேற் புருவங்கள் குவிந் திருப்பதால் கண்கள் திறந்திருந்தும். சிறிது மூடியது போல் தோற்றம் அளிக்கும். பேசும் போது கண்ணை மூடிக் கொண்டு பேசுவர். கை, கால்கள் திரண்டு சக்தி வாய்ந்தனவாக விளங்கும்.

குணம்

ஆவணி யில் தோன்றியவர்களுடைய ராசியே வேறு. காட்டு ராஜாவாகிய சிங்கமானது தன் இருப்பிடத்தில ருந்துகொண்டே பசி நேரத்தில் தன் வயப்படும் மிருக ஜந்துக்களை வேட்டையாடி, தன் பசியாற்றிக்கொள்வது போல் ஆவணி மாதத்தில் பிறந்தவர்களும் தம்முடைய காரியங்களைத் தம்முடைய இருப்பிடத்தில் இருந்து கொண்டே சாதித்துக் கொள்வர்.எதையும் இவர் ஒரு பொருட்டாகக் கருதமாட் டார். இயற்கை வழியே இறைவன் வழியென்று இவர் கருதிடுவார்.

நோயும்-தீரும் வகையும்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் ஓயாது உழைப்பர். சக்திக்கு மீறி காரியங்களையும், அலுப்பு சலிப்பின்றிச் செய்திடுவர். செய்யும் காரி யங்களில் எதிர்ப்புகளும், முட்டுக்கட்டைகளும் தோன்றுவது இவர் வாழ்க்கையில் சர்வசாதாரண மாயினும் இவர் மிகவும் அதிர்ச்சி அடைந்திடுவர். இதன் விளைவாக இருதயக் கோளாறுகள், மார்பு வலி இதனால் தலைவலியும் ஏற்படும். அடுத்த படியாக வயிற்றுக் கோளாறு, நரம்புத்தளர்ச்சி, வாதம் போன்ற அசதிகளும் அவரை அடிக்கடி வாட்டிடும்.

அதிக சக்தி வாய்ந்த மருந்து வகைகளை உட்கொள்ளவோ, ஊசியின் மூலம் மருந்து ஏற்றிக் கொள்ளவோ கூடாது. பத்தியமான உணவு முறையாலும், உழைப்புக் குறைவினாலும், ஓய்வு மிகுதியினாலும் உற்ற பிணியை இயற்கையாகவே போக்கிக் கொள்ளலாம்.

குறையும்-நிறையும்

எதிரிகளின் தொல்லை அதிகமிருப்பினும் பொருட்படுத்தார். எதிர்த்தவர்களைத் தகர்த்திடும் சாமர்த்தியமுடையவர். தைரியசாலி. புதிய கருத் துகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஊக்கமளிப்பர். உறவினர்களிடத்தில் வாஞ்சையுடையவர். இருப்பது சிறிதெனினும் சுயமாகத் தேடுவது அதைவிட பன்மடங்காகும். துண்டித்த விவகாரங்களை மீண் டும் சரிப்படுத்துபவர்.

நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைக் கைவிடார். இவரும் சுயநலவாதி என்றாலும் தம்மையடுத்தவர்களுக்கு நல்ல பாதுகாப்பளித்தி டுவர். உதாரகுணமுடையவர். தர்மசிந்தையுடையவர். ஆனால் அதே தருணத்தில் சிறிய மனப்பான் மையுடைவயர்களிடத்தில் இவர் மனம் இரங்காது. தீர்க்கதரிசி. ஆத்திரத்தில் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவர்.

வாழ்க்கைத் துணை

மார்கழி, சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணைவியாகவோ, கூட்டாளியாகவோ அமைவது சிறந்ததாகும். தை, மாசி மாதங் களில் பிறந்தவர்களும், ஆடி மாதத்தில் தோன்றியவர்களும் இவர்களுக்கு கஷ்டத்தையும், வம்பு வழக்குகளையும் உண்டாக்கிடுவர்.

தொழில்

முன்னணியில் நிற்கக்கூடிய பிரதான ஸ்தானங்களைத் திறமையுடன் ஏற்று வகிப்பர். நல்ல சங்கீத வித்துவான்களாகவும், கவிஞரா கவும், ஓவியராகவும், பொன்மகுட ஆபரணங் களைத் தயாரிப்பவர்களாகவும் விளங்குவர்.

அதிர்ஷ்ட எண்

இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு 1,4 அதிர்ஷ்ட எண் ஆகும்.

நலந்தரும் நிறம்

சிவப்பு

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers