பிரச்சாரத்தில் கடினத்தை எதிர்கொண்டேன்: வரலாற்றில் இடம் பிடித்து தலைவர்களால் வாழ்த்து பெற்ற திருநங்கை

Report Print Abisha in வாழ்க்கை

சென்னையில் தன்னாட்சி கல்லூரியில் படிக்கு திருநங்கை மாணவி, கல்லூரியில் சங்கத்தில் இணை செயலாளராக இடம் பிடித்து வரலாற்று சாதனை பிடித்துள்ளார்.

கல்லூரிகளில் மாணவர்கள் பேரவை அமைப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் சென்னையில் உள்ள தன்னாட்சி கல்லூரியிலும் அதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எம்.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படிக்கும் திருநங்கை மாணவி பிரசிதா போட்டியிட்டார். யாரும் எதிர்பார்க்கதா விதத்தில் வெற்றிபெற்ற அவருக்கு இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி அதிகாரிகள் கூறியதாவது, கல்லூரி வரலாற்றிலேயே ஒரு திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றனர்.

மாணவி பிரசிதா பேசியதாவது, தனது வெற்றி மூலம் திருநங்கைகளுக்கான ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று நம்புகிறேன். கல்லூரி பெண்கள் மற்றும் திருநங்கைகளின் நலனுக்காக செயல்படுவேன்.

“நான் 2017 ஆம் ஆண்டில் இதே பதவிக்கு பிரச்சாரம் செய்தேன். அந்த ஆண்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அந்த தேர்தலில் திருநங்கையாக இருப்பதால் பிரச்சாரத்தில் நான் ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டேன். ஆனால் இந்த ஆண்டு, இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.சக மாணவர்களின் நம்பிக்கையை நான் வென்றேன் என்பதை எனது தேர்தல் வெற்றி பிரதிபலிக்கிறது. என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில், திருநங்கை பிரசிதா வெற்றி பெற்றதற்கு திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers