9பேர் கொண்டகுழுவின் வழக்கு விசாரணையை இந்திய நீதிதுறை நிறுத்த காரணமான ஒரு கொலை வழக்கு... இது ஒருவரின் வாழ்க்கை

Report Print Abisha in வாழ்க்கை

இந்தியாவில் 9பேர் கொண்ட குழு விசாரணை நடத்திய கடைசி கொலை வழக்கு ஒரு கள்ளகாதல் தொடர்பானது என்பது எத்தனை பேருக்கு தெரியும்

இந்திய இராணுவ கப்பல் தளவதி நாணாவதி செய்த கொலை தான் இந்தியாவில் 9பேர் கொண்ட குழு விசாரணை நடத்திய கடைசி வழக்கு.

நாணாவதி அகுஜா நெருக்கிய நண்பர்கள் ஆவர். சில்வியா லண்டனை சேர்ந்த பெண். லண்டனுக்கு நாணாவதி பணி நிமித்தமாக அவரது 24வது வயதில் செல்கிறார். அங்கு சில்வியாவை பார்த்து காதல் வயப்பட்டு அவரை 1949 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் எளிய முறையில், திருமணம் செய்து கொண்டர்.

இந்திய திரும்பிய தம்பதியினர் மும்பையில் குடிபுகுந்தனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர்களின் அமைதியான வாழ்க்கையில், அகுஜா என்ற ஒரு மிகம் பெரும் புயல் வீச ஆரம்பித்தது.

அகுஜா மிகம்பெரிய பணக்காரன் அவனது முக்கிய பணி அடிக்கடி இராணுவீரர்களுக்கான பார்ட்டியில் கலந்து கொண்டு வீரர்களின் மனைவிகளை வலையில் விழ வைப்பதுதான்.

இந்நிலையில் நாணாவதியும் அகுஜாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் சில்விய அகுஜாவுடன் நன்கு பழக துவங்கினார். நாணாவதி ஆறுமாதங்களுக்கு பின் மட்டும் வீட்டிற்கு வருவதால் சில்வியாவிற்கு அகுஜாவின் அரவணைப்பு காதலாகவும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் உறவாகவும் மாறியது.

இந்நிலையில் சில்வியா அகுஜாவை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியபோது மறுத்ததால் தான் ஏற்மாற்றப்பட்டதை அவள் உணர்ந்தாள்.

நாடு திரும்பிய நாணாவதியிடம் சில்வியாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டு அதை விசாரிக்க துவங்கினார். அப்போது நடந்ததை தெரிவித்த சில்வியா கதறி அழ துவங்கினாள். இதை பார்த்த நாணாவதி நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கதற துவங்கினார். இதை பார்த்து சிவியாவால் பொறுத்து கொள்ள முடியாமல் ஆறுதல்படுத்தினாள்.

பின் சில்வியாவுடன் தியேட்டருக்கு சென்ற நாணாவதி குழந்தையையும் அவளையும் அமர வைத்துவிட்டு. கப்பல்படை ஆயுதகிடங்கிற்கு சென்று துப்பாக்கி ஒன்றை பெற்றுகொண்டார். பின் அகுஜா-வின் வீட்டிற்கு சென்று, சில்வியாவை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்க, அகுஜாவோ ”என்னுடன் படுத்த எல்லா பெண்களையும் திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்று கேட்டதும் கோவம் கொண்ட நாணாவதி அவனை சுட்டார். இதில் அகுஜா பலியானான்.

பின் இது குறித்த வழக்கில் விசாரிக்க 9பேர் கொண்ட குழு விசாரணைக்கு அமைக்கப்பட்டது. அந்த குழுவிற்கு பெரிய சிரமம் இல்லை ஏனென்றால், அவர் திட்டமிட்டு கொலை செய்தாரா...? இல்லை அது விபத்தா என்பது மட்டுதான் விசாரிக்க வேண்டும்.

இந்நிலையில் 9பேர் கொண்ட குழுவில் 8பேர் ராணாவதி குற்றமற்றவர் என்றும் ஒருவர் குற்றவாளி என்றும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்திற்கு ஆலோசனைக்கு அனுப்பப்பட்டது. மும்பை உயர்நீதிமன்றம் நாணாவதி குற்றவாளி என்று தீர்பளித்தது.

இந்த சம்பவத்தை வெளியிட்டுவந்த பிளிட்ஷ் என்ற பத்திரிக்கை நாணாவதிக்கு ஆதரவாக பல செய்திகளை தொடர்ந்து வெளியிட்டது.

இதானல் மக்கள் ஆதரவு நாணாவதிக்கு அதிகரித்தது. எனவே கருணை அடிப்படையில் நாணாவதியை விடுதலை செய்ய முடிவு செய்தது இந்திய அரசு

அதன்படி 1962ஆம் ஆண்டு நாணாபதி விடுதலை செய்யப்பட்டார். பின் அவர் கனடாவில் குடிபுகுந்து, 2003ஆம் ஆண்டு காலமானார்.

இந்த வழக்கில் முக்கியாமாக பார்க்கப்படுவதன் காரணம், இந்த வழக்கி 9பேர் கொண்ட குழு அமைத்து விசாரித்ததில் பெரும்பாலும் ஊடங்கங்கள் மற்றும், மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே இந்த வழக்கை விசாரணை முடிவடைந்தது. அதனால் தான் 9பேர் கொண்ட வழக்கு விசாரணையை அதன்பின் இந்திய நீதிமன்றத்தில் தொடரவில்லை.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்