அம்பானி மகனின் திருமணம்.. ஒரு அழைப்பிதழின் விலை மட்டுமே இவ்வளவா?

Report Print Kabilan in வாழ்க்கை

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், ஆடம்பரமான திருமண அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானி-நீதா அம்பானி தம்பதியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தாவிற்கும் அடுத்த மாதம் 10ஆம் திகதி திருமணம் நடக்க உள்ளது.

ஷ்லோகா மேத்தா, ஆகாஷ் அம்பானியின் சிறு வயது தோழி ஆவார். இவர்களின் திருமணத்திற்கான அழைப்பிதழ் தற்போது வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த அழைப்பிதழ், அழகிய இளஞ்சிவப்பு நிறப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. பெட்டகத்தின் மேற்புறத்தில் சூரிய ஒளியில் தாமரைகள் மலர்ந்திருக்க, மயில்கள் நடனமாட, பசுக்களுக்கு நடுவே ராதையும், கிருஷ்ணனும் இருக்கிறார்கள்.

அதைத் திறந்தவுடன் மேல் பகுதியில் வெள்ளி ஃப்ரேமில் ராதா, கிருஷ்ணன் படம் வைக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிறத்தில் அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைத் திறந்தவுடன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு அழைப்பு என பக்கங்கள் விரிகின்றன.

அடுத்ததாக ரதத்தில் இருக்கும் வெண்ணிற விநாயகரின் உருவம் உள்ளது. இறுதியாக முகேஷ் அம்பானி-நீதா அம்பானி தம்பதியின் அழைப்பு உள்ளது. ஒரு அழைப்பிதழின் மதிப்பு ரூ.1.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

பிரபலங்கள், நடிகர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆடம்பரமாக உள்ள இந்த அழைப்பிதழ் குறித்து நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...