தனிமையில் இருக்கும் நபர்கள் தான் முன்கூட்டியே மரணம் அடைகிறார்கள்! இது தெரியுமா உங்களுக்கு

Report Print Santhan in வாழ்க்கை
291Shares
291Shares
ibctamil.com

தனிமையில் வாழும் மனிதர்கள் ஏக்கம், மன அழுத்தம், இதய நோய்களால் பாதிக்கப்பட்டு முன்கூட்டியே மரணம் அடைவது தற்போதைய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

டென்மார்க் மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற கோபின் கேகன் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, அனி விண்கார்ட் கிறிஸ்டன்சென் என்ற பயிற்சி மருத்துவர் தனிமையில் வாழும் மனிதர்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். 13,463 இதய நோயாளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களிடம் உங்களுக்கு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது ஏன்? எப்படி இதய நோய் ஏற்பட்டது? புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் இதயநோய் உண்டானதா? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பெரும்பாலானவர்கள் தனிமையில் வாடுவதால் தான் இத்தகைய கொடூர நோய் தாக்குதலுக்கு ஆளாகியதாக தெரிவித்தனர்.

தனிமையில் இருக்கும்போது மனஅழுத்தம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு இருமடங்காக இருக்கிறது.

இதனால் உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டு நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இதேநிலை தொடரும் பட்சத்தில் அவர்கள் விரைவில் மரணம் அடைகின்றனர் என்று அந்த மருத்துவ ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்